மெக்கா புனிதப் பயணம்: புதிய அறிவிப்பை வெளியிட்ட அரேபிய அரசு..!

மெக்கா புனிதப் பயணம்: புதிய அறிவிப்பை வெளியிட்ட அரேபிய அரசு..!
மெக்கா புனிதப் பயணம்: புதிய அறிவிப்பை வெளியிட்ட அரேபிய அரசு..!

கொரோனா தொற்றின் காரணமாக மெக்கா புனிதப் பயணம் செல்ல யாத்ரீகர்களுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டிருந்தது. ஏழு மாதங்களுக்குப் பிறகு வரும் அக்டோபர் 4 ம் தேதி முதல் படிப்படியாக அனுமதிக்கப்படுவார்கள் என சவுதி அரேபியாவின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

முதல் கட்டமாக அரபு அமீரகத்தைச் சேர்ந்த 6 ஆயிரம் பேர் தினமும் அக்டோபர் 4ம் தேதி முதல் புனிதப் பயணத்திற்கு அனுமதிக்கப்படவுள்ளார்கள். வெளிநாட்டுப் பயணிகளுக்கு நவம்பர் 1 ம் தேதியன்று அனுமதி வழங்கப்படும். அப்போது தினசரி
20 ஆயிரம் யாத்ரீகர்கள் வரை செல்லலாம் எனவும் அமைச்சகம் கூறியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மெக்கா நகருக்கு உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான இஸ்லாமிய மக்கள் புனிதப் பயணம் சென்றுவருகின்றனர். தமிழகத்தில் இருந்தும் பலர் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வது வழக்கம். கொரோனா காலத்திற்குப் பிறகு இப்போது புனிதப் பயணத்திற்கு முழு அளவில் பயணிகளை அனுமதிக்க முடிவு அரேபிய அரசு எடுத்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com