
இஸ்ரேலிய - ஹமாஸ் படைகளுக்கு இடையிலான போர் தீவிரமடைந்து வரும்நிலையில், இஸ்ரேலுக்கு சவுதி அரேபிய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ”பாலஸ்தீன மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில், அவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் சூழலை உருவாக்கி வரும் இஸ்ரேல் ராணுவத்தின் நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்கது” என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் வெளியிட்ட கண்டன அறிக்கையில்,
”பாலஸ்தீனர்களை இனப்படுகொலை செய்யும் முயற்சிகளில் இஸ்ரேல் ஈடுபட்டு வருகிறது. அதிகாரம் படைத்தவர்களும் இதை அனுமதித்து வருவது கண்டனத்திற்குரியது
சர்வதேச விதிகளை மீறி போர் குற்றங்களில் இஸ்ரேல் ஈடுபட்டு வருகிறது. இந்த இனப்படுகொலையை முடிவுக்கு கொண்டுவர இஸ்லாமிய நாடுகள் குரல் கொடுக்க வேண்டும்” என
கேட்டுக்கொண்டார்.
இப்படி தீவிர தாக்குதலை ஏற்படுத்தி வரும் இஸ்ரேல் - பாலஸ்தீனப்போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று பல்வேறு நாட்டு தலைவரும் குரல் கொடுத்து வருகின்றனர்.