\
Saudi Arabia Issues Shock ALERT on Missile Tensions Near Mecca
holy mecca city Reuters

மெக்காவுக்கு அருகே ஏவுகணை பதற்றம்! சவூதி வெளியிட்ட அதிரடி ALERT!

மெக்கா சுற்றுவட்டாரத்தில் ஏவுகணை, ட்ரோன் அச்சுறுத்தல்; சவூதி எச்சரிக்கை, சில நிமிடங்களில் திரும்பப் பெறல்
Published on: 

ஏமனில் பல ஆண்டுகளாக நீடித்து வரும் உள்நாட்டுப் போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி குழுக்கள், சவுதி அரேபியா ஆதரவு பெற்ற ஏமன் அரசுப் படைகளின் நிலைகளை குறிவைத்து ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளன. ஹார்முஸ் நீரிணையைச் சுற்றி அமெரிக்கா–ஈரான் மோதல் நீடிக்கும் நிலையில், செங்கடலிலும் ஹவுதி நடவடிக்கைகள் தீவிரமடைவது வளைகுடா நாடுகளுக்கு புதிய நெருக்கடியை உருவாக்கியுள்ளது. இதன் தாக்கமாக, கடந்த வாரம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 100 டாலருக்கு மேல் உயர்ந்தது.

The drop in crude oil prices
The drop in crude oil prices Reuters

இந்த போரில் செப்டம்பர் 16ஆம் தேதி இஸ்லாமியர்களின் புனித நகரமான மெக்கா அருகே ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக சவுதி அரேபியா தெரிவித்தது. மெக்காவின் புறநகர்ப் பகுதியில் பறந்து வந்த ட்ரோனை சவுதி வான் பாதுகாப்புப் படைகள் சுட்டு வீழ்த்தியதாக சவுதி தலைமையிலான கூட்டுப்படையின் செய்தித் தொடர்பாளர் துர்கி அல்-மாலிகி தெரிவித்திருந்தார்.

ஆனால், மெக்காவை தாங்கள் குறிவைக்கவில்லை என ஹவுதிகள் உடனடியாக மறுப்பு தெரிவித்திருந்தனர். ஹவுதி அமைப்பின் ராணுவ செய்தித் தொடர்பாளர் யஹ்யா சாரி, கட்டுக் கதைகளும் பொய்களும் சொல்லி யாரையும் ஏமாற்ற முடியாது என்றும் புனிதத் தலங்களுக்கு ஏமனில் இருந்து எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் மீண்டும் புனித நகரமான மெக்காவைச் சுற்றி பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. செப்டம்பர் 24 அன்று சவூதி அரேபியாவின் National Early Warning Platform மூலம் மெக்கா நகரில் ஆபத்து ஏற்படக்கூடிய வாய்ப்பு இருப்பதாக கூறி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஜெத்தா, யன்பு, தாயிஃப் மற்றும் தபூக் பகுதிகளுக்கும் இதேபோன்ற எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டது. சில நிமிடங்களுக்குப் பிறகு இந்த எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டு, ஆபத்து கடந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Saudi Arabia
Saudi Arabia reuters

மக்கள் அமைதியாக இருக்க வேண்டும், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும், திறந்தவெளி மற்றும் ஜன்னல்கள் அருகே நிற்பதைத் தவிர்க்க வேண்டும் என சவூதி சிவில் பாதுகாப்புத்துறை அறிவுறுத்தியது.

இந்த எச்சரிக்கை வெளியாகிய அதே நாளில், சவூதி தலைமையிலான கூட்டுப்படைகள் ஏமனின் ஹவுதி அமைப்பு ஏவியதாகக் கூறப்படும் 6 பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்ததாக தெரிவித்தன. அவை தாயிஃப் மற்றும் செங்கடல் துறைமுக நகரமான யன்பு நோக்கி செலுத்தப்பட்டதாக சவூதி தரப்பு கூறியது.

மேலும், செப்டம்பர் 19 அன்று ரியாத் நோக்கி ஹவுதிகள் பாலிஸ்டிக் ஏவுகணை ஏவியதாகவும், அதை சவூதி வான்பாதுகாப்பு அமைப்பு இடைமறித்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இது சமீபத்திய மோதல் தீவிரமடைந்த பிறகு ரியாத் மீது நடத்தப்பட்ட முதல் தாக்குதல் முயற்சியாக சவூதி தரப்பு குறிப்பிட்டது.

Riyadh
Riyadh reuters

இதனுடன், ஈரானிய அதிகாரிகள் அமெரிக்காவின் தடைகளுக்கு உதவும் அண்டை நாடுகளுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரான் விமானங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவோ, அமெரிக்காவுக்கு உதவவோ அண்டை நாடுகள் முன்வந்தால் பதிலடி கொடுக்கப்படும் என்ற எச்சரிக்கை இதில் அடங்குகிறது. இதனால் மோதல் என்பது ஈரான்–அமெரிக்கா அல்லது சவூதி–ஹவுதி எல்லைக்குள் மட்டும் நின்றுவிடாமல், வளைகுடா மற்றும் செங்கடல் பிராந்தியத்தில் உள்ள பல நாடுகளையும் பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

Saudi Arabia Issues Shock ALERT on Missile Tensions Near Mecca
வளைகுடாவில் அதிகரிக்கும் பதற்றம்.. ஈரான் கையில் சிக்கிய கப்பல்கள்.. அடுத்து என்ன?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com