சவுதி அரேபியா நாட்டில் எரிபொருளின் விலை இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவில் ஆக்டேன் 91 ரக எரிபொருள் ஒரு லிட்டரின் விலை 0.75 ரியாலில் இருந்து 1.37 ரியாலாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆக்டேன் 95 ரக எரிபொருள் 0.90 ரியாலில் இருந்து 2.04 ரியாலாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. எரிபொருள் ஏற்றுமதியிலிருந்து வரும் வருவாயை மட்டுமே சார்ந்திருக்காமல் இருக்க அந்நாட்டு அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. விலை ஏற்றத்திற்கு அந்நாட்டு வாகன ஓட்டுனர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.