\
ஏமனில் மூடப்பட்ட எல்லைகளைத் திறக்க சவுதி அரேபியா சம்மதம்

ஏமனில் மூடப்பட்ட எல்லைகளைத் திறக்க சவுதி அரேபியா சம்மதம்

ஏமனில் மூடப்பட்ட எல்லைகளைத் திறக்க சவுதி அரேபியா சம்மதம்
Published on

ஏமன் நாட்டின் வான்வழி‌ மற்றும் கடல்வழி எல்லைகளை திறப்பதற்கு சவுதி அரேபிய அரசு சம்மதம் தெரிவித்துள்ளது.

சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் உள்ள விமான நிலையத்தை குறி வைத்து ஏமனில் இருந்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை வீசி நடத்திய தாக்குதலை, கடைசி நேரத்தில் சவுதி அரே‌பிய படைகள் முறியடித்தன. இதன் காரணமாக உயிர் சேதம் தவி‌ர்க்கப்பட்டது. மீண்டும் இத்தகைய தாக்குதல் நடைபெறாமல் இருப்பதற்காக ஏமன் நாட்டின் வான்வழி, கடல்வழி என ‌அனைத்து எல்லைப் பகுதிகளையு‌ம், சவுதி அரேபிய அரசு மூடியது. இதனால் உணவுப் பொருட்கள், எரிபொருட்கள், மருந்துக‌ள் கிடைக்காமல் ஏமன் மக்கள் பரிதவித்தனர். இதைத் தொடர்ந்து மக்களின் நலனை கருத்தில் கொண்டு, மூடப்பட்ட எல்லைகளை திறக்கும்படி சவுதி அரேபிய அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை கோரிக்கை விடுத்தது.

இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்துக்குள் வான்வழி மற்றும் கடல்வழி எல்லைப் பகுதிகளை திறக்கப் போவதாக சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஏமன் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள துறைமுகங்‌கள், விமான நிலை‌ங்களை திறக்கும் பணியில் சவுதி அரசு நிர்வாகிகள் மும்முர‌மாக ஈடுபட்டு வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com