சவுதி அரேபியாவின் முதல் பெண் தூதுவராக ரீமா பிண்ட் நியமனம்

சவுதி அரேபியாவின் முதல் பெண் தூதுவராக ரீமா பிண்ட் நியமனம்

சவுதி அரேபியாவின் முதல் பெண் தூதுவராக ரீமா பிண்ட் நியமனம்
Published on

வரலாற்றிலேயே முதன்முதலாக ஒரு பெண் தூதுவரை சவுதி அரேபியா நியமனம் செய்துள்ளது

சவுதி அரேபியாவின் இளவரசி ரீமா பிண்ட் பாண்டார் அல் சவுத்தை அமெரிக்காவுக்கான தூதுவராக சவுதி அரேபியா நியமனம் செய்துள்ளது. இந்த நியமனத்தின் மூலம்  ரீமா பிண்ட், சவுதி அரேபியாவில் தூதர் பதவியை ஏற்கும் முதல் பெண் என்ற பெருமையை பெறுகிறார். தற்போது அமெரிக்காவின் தூதுவராக ரீமாவின் சகோதரர் காலித் பின் சல்மான் பணியாற்றி வருகிறார். அவர் தற்போது நாட்டின் துணை பாதுகாப்புத் துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவரது இடத்தை ரீமா நிரப்புவார் எனக் கூறப்படுகிறது.

இளவரசி ரீமா பிண்ட்டின் தந்தையான பண்டார் அல் சுல்தான் 1983 முதல் 2005 வரை அமெரிக்க தூதர் பொறுப்பில் இருந்தவர். அந்தக்காலக்கட்டத்தில் தனது குழந்தை பருவத்தை அமெரிக்காவில் கழித்தார் ரீமா பிண்ட்.  

ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் கலை படிப்புகளுக்கான பட்டம் பெற்ற ரீமா, ரியாத்தில் பொது மற்றும் தனியார் துறையிலும் பணியாற்றியுள்ளார். மேலும் ஹார்வி நிக்கோலஸ் நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார். பெண்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் ரீமாவை, அரேபியாவின் பலம்வாய்ந்த 200 பெண்களில் ஒருவராக போர்ப்ஸ் தேர்ந்தெடுத்தது குறிப்பிடத்தக்கது. ரீமா, மார்பக புற்றுநோய் குறித்தும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

பத்திரிகையாளர் ஜமால் கஷோகியில் இறப்பு குறித்து மர்மம் நீடித்து வரும் வேளையில் ரீமாவை தூதராக சவுதி அரேபியா நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com