சவூதியில் தீ விபத்து: இந்தியர்கள் உட்பட 11 பலி

சவூதியில் தீ விபத்து: இந்தியர்கள் உட்பட 11 பலி

சவூதியில் தீ விபத்து: இந்தியர்கள் உட்பட 11 பலி
Published on

சவூதி அரேபியாவில் உள்ள நஜ்ரன் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்தியா மற்றும் வங்கதேசத்தை சேர்ந்த 11 பேர் பலியாகினர்.

தெற்கு ஆசியாவிலிருந்து சுமார் 9 மில்லியின் தொழிலாளர்கள் சவூதி அரேபியாவில் தங்கி வேலை செய்து வருகின்றனர். அந்த வகையில், நஜ்ரன் என்ற நகரில் தங்கி பணிசெய்யும் தொழிலாளர்கள், பைசாலியா மாவட்டத்தில் உள்ள கோல்ட் மார்க்கெட் அருகில் நடைபெறும் கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வந்தனர். இவர்கள் வழக்கம்போல் இரவு வீட்டிற்கு சென்று தூங்கியுள்ளனர். அப்போது அங்குள்ள ஏசியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தினால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இந்தியா மற்றும் வங்கதேசத்தை சேர்ந்த 11 பேர் உயிரிழந்தனர்.

மேலும், 6 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த நஜ்ரன் கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com