சவுதியில் வரும் 18 -ம் தேதி முதல் தியேட்டரில் சினிமா பார்க்கலாம்!

சவுதியில் வரும் 18 -ம் தேதி முதல் தியேட்டரில் சினிமா பார்க்கலாம்!

சவுதியில் வரும் 18 -ம் தேதி முதல் தியேட்டரில் சினிமா பார்க்கலாம்!
Published on

சவுதி அரேபியாவில் 35 வருடங்களுக்குப் பிறகு வரும் 18-ம் தேதி முதல் தியேட்டர்கள் செயல்படத் தொடங்கும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

சவுதி அரேபியாவில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. அதில் ஒன்று சினிமா. மத கட்டுப்பாடுகள் மீறப்படுவதாகக் கூறி கடந்த 1980-களின் தொடக்கத்தில் சினிமாவுக்கு சவுதி அரசு தடை விதித்தது. தற்போது சவுதியின் பட்டத்து இளவரசராக இருக்கும் முகமது பின் சல்மான், பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

பெண்கள் வாகனம் ஓட்டுவது, விளையாட்டை மைதானங்களில் பெண்கள் கண்டுகளிக்க அனுமதி உள்ளிட்ட விஷயங்களை செயல்படுத்தி வருகிறார். அதன் அடுத்தக் கட்டமாக சுமார் 35 வருடத்துக்கு ஆண்டுகளுக்குப் பின், முதல் முறையாக அந்த நாட்டில் சினிமாவுக்கும் அனுமதி வழங்க அரசு முடிவு செய்தது.

அதன்படி வரும் 18-ம் தேதி முதல் தியேட்டர்கள் செயல்படத் தொடங்குகிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் சவுதியில் உள்ள 15 நகரங்களில் 30 முதல் 40 தியேட்டர்கள் வரை திறக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.


 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com