செஜ்ஜில்
செஜ்ஜில்fb

இஸ்ரேல் மீது ஈரான் "செஜ்ஜில்" ஏவுகணைகளால் தாக்குதல்!

இந்த ஏவுகணையானது 18 மீட்டர் உயரம் கொண்டது. செஜ்ஜில் ஏவுகணையின் 6ஆவது கட்ட சோதனையில், அது இந்திய பெருங்கடலுக்குள் ஆயிரத்து 900 கிலோ மீட்டர் பறந்து இலக்கை தாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Published on

இஸ்ரேல் நாட்டின் மீது ஈரான் "செஜ்ஜில்" என்ற ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த ஏவுகணைகள், தங்களது மிகவும் துல்லியமான மற்றும் சக்திவாய்ந்த ஆயுதங்கள் என அந்நாடு தெரிவித்துள்ளது.

ஈரான் தயாரித்த இந்த ஏவுகணை சுமார் 2,000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கையும் துல்லியமாகத் தாக்கி அழிக்க வல்லது என்றும், அதிவேகமாக இலக்கை அடையும் என்றும் கூறப்படுகிறது. இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கு சவாலாக இருக்கும் என்றும், அதிவேகம் காரணமாக, இஸ்ரேல் வான் பாதுகாப்பு அமைப்புகளால், செஜ்ஜில் ஏவுகணையைத் தடுக்க முடியாது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து ஈரான் ஊடகங்கள் வெளியிட்டிருக்கும் செய்தியில், ”இரண்டு நிலைகளைக் கொண்ட செஜ்ஜில் ஏவுகணையில், திட எரிபொருள் நிரப்பப்படுகிறது. தரையில் இருந்து தரையில் இருக்கும் இலக்குகளைக் குறிவைத்துத் தாக்கும் வகையில், ஈரானில் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம், இஸ்ரேலின் எந்த வொருப் பகுதியையும் குறிவைத்து ஈரானால் தாக்க முடியும். அது மட்டுமல்லாமல் தென்கிழக்கு ஐரோப்பிய நாடுகளையும் கூட ஈரானால் தாக்க முடியும். ” என்று தெரிவித்துள்ளது.

Sejjil

Sejjil என்பது இரு நிலை (Two-stage), திட எரிபொருளால் இயங்கும், நீண்ட தூரம் செல்லக்கூடிய (long-range) ஏவுகணையாகும்.

இதன் தூர அளவு சுமார் 2,000 கிமீ என்றும், 700 கிலோ கிராம் வெடிமருந்து கொண்டு செல்லக்கூடிய திறன் கொண்டதாகவும் CSIS தகவல்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது. 2008-ல் முதன்முதலில் பரிசோதிக்கப்பட்ட இந்த ஏவுகணை, பழைய Shahab ஏவுகணைகளுக்கு மாறாக, திட எரிபொருள் பயன்பாட்டால் விரைவில் தயாரித்து ஏவ முடியும் என்ற தன்மை கொண்டது. இந்த ஏவுகணையானது 18 மீட்டர் உயரம் கொண்டது. செஜ்ஜில் ஏவுகணையின் 6ஆவது கட்ட சோதனையில், அது இந்திய பெருங்கடலுக்குள் ஆயிரத்து 900 கிலோ மீட்டர் பறந்து இலக்கை தாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இது எதிரிகளின் கண்டுபிடிப்புத் தொழில்நுட்பங்களில் சிக்காது என்றும், இஸ்ரேலில் உள்ள இரும்பு டோம் பாதுகாப்பு மையங்களையும் கூட எதிர்க்கும் வல்லமை பெற்றது என்றும், ஈரான் நாட்டின் தொழில்நுட்ப பாதுகாப்புத் திறனுக்கும், உள்நாட்டுச் சக்திக்கும் அடையாளமாக இந்த செஜ்ஜில் ஏவுகணை இருக்கிறது என்றால் அதன் தாக்கும் திறன் உலக நாடுகளுக்கே அச்சமூட்டுவதாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

செஜ்ஜில்
“இது வெறும் கீறல்தான்” - வெடித்துச் சிதறிய ஸ்பேஸ் எக்ஸின் விண்கலம் குறித்து எலான் மஸ்க் பதிவு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com