\
விரக்தியால் தனது 2.42 கோடி காரை தீயிட்டு கொளுத்திய யூடியூப் பதிவர்

விரக்தியால் தனது 2.42 கோடி காரை தீயிட்டு கொளுத்திய யூடியூப் பதிவர்

விரக்தியால் தனது 2.42 கோடி காரை தீயிட்டு கொளுத்திய யூடியூப் பதிவர்
Published on: 

ரஷ்யாவை சேர்ந்த யூடியூப் பதிவர் ஒருவர் விரக்தியடைந்ததால் தனது 2.42 கோடி ரூபாய் மதிப்புள்ள மெர்சிடிஸ் காரை தீயிட்டு கொளுத்தி உள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. 

யூடியூப் தளத்தில் வைரலாகி உள்ள இந்த வீடியோவில் ரஷ்ய யூடியூப் பயனர் மிகைல் லிட்வின் எனப்படும் மிஷா தனது சொகுசு ரக காரை தீயிட்டு கொளுத்தும் காட்சிகள் பதிவாகியுள்ளன. 

அவர் பயன்படுத்தி வந்த மெர்சிடிஸ் AMG GT 63S மாடல் கார் தொடர்ந்து பல பிரச்சனைகளை கொடுத்து வந்துள்ளது. அதனை சரி செய்ய அவரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். இருப்பினும் அதற்கு தீர்வு கிடைக்காததால் விரக்தியடைந்து காரை தீயிட்டு கொளுத்தி உள்ளார். 

“பல நாட்களாக என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டிருந்தேன். மெர்சிடிஸ் உடனான முரணுக்கு பின்னர் காருக்கு தீ வைப்பது தான் ஒரே தீர்வாக இருக்கும் என எண்ணி அதை செய்து விட்டேன். நான் சந்தோஷமாக இல்லை” என அதற்கு கேப்ஷனும் போட்டுள்ளார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com