உலகம்
பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுகிறார்களா ரஷ்ய வீரர்கள்? - உக்ரைனின் பகீர் குற்றச்சாட்டு
பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுகிறார்களா ரஷ்ய வீரர்கள்? - உக்ரைனின் பகீர் குற்றச்சாட்டு
உக்ரைனில் உள்ள ஏராளமான பெண்களை ரஷ்ய வீரர்கள் பாலியல் வன்கொடுமை செய்கின்றனர் என்று அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய உக்ரைன் வெளியுறவு மந்திரி டிமிட்ரோ குலேபா, "உக்ரைன் நகரங்களில் விளாடிமிர் புடினின் படைகள் பல இடங்களில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளன. இது தொடர்பாக நாடு முழுவதும் பல இடங்களில் வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த குற்றத்துக்காக புடின் போர்க்குற்ற நீதிமன்றத்தை எதிர்கொள்ள வேண்டும்" என தெரிவித்தார்
கடந்த 10 நாட்களுக்கும் மேலாக உக்ரைன் மீது ரஷ்யா கடுமையான தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலில் ரஷ்யா மீது உக்ரைன் தொடர்ச்சியாக பல போர்க்குற்றங்களையும் சுமத்தி வருகிறது.