ரஷ்யா - உக்ரைன் போர்: கேமரா லென்சில் ரஷ்ய டென்னிஸ் வீரர் எழுதிய கருத்து வைரல்
துபாய் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடரில் அரையிறுதியில் வெற்றிபெற்றப் பின்னர், ரஷ்ய டென்னிஸ் வீரர் ரூப்லெவ், கேமரா லென்சில் ‘போர் வேண்டாம் ப்ளீஸ்’ என்று எழுதி, தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
துபாய் சாம்பியன்ஷிப் அரையிறுதி ஆட்டத்தில், ரஷ்யாவின் ஆண்ட்ரே ரூப்லெவ், போலந்தின் ஹுபர் ஹர்காஸை எதிர்கொண்டார். விறுவிறுப்பு நிறைந்த போட்டியில், 3-6 ,7-5, 7-6 என்ற செட் கணக்கில் ரஷ்ய வீரர் வெற்றி பெற்றார். பின்னர் கேமிரா லென்சில், போர் வேண்டாம் என்ற வாசகத்தை எழுதினார். உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அந்நாட்டு வீரர் ஒருவரே போர் வேண்டாம் என்ற செய்தியை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு போட்டியில், செக் குடியரசின் ஜெரி வெஸ்லே, 6-7, 7-6, 7-6 என்ற செட் கணக்கில் கனடாவின் டெனிஸ் ஷாபோவலோவை வீழ்த்தினார். இதையடுத்து, துபாய் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடரில், ரஷ்யாவின் ரூப்லெவ், செக் குடியரசின் வெஸ்லெ ஆகிய இருவரும், இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளனர். போர் வேண்டாம் என்ற செய்தியை, ரஷ்ய வீரர், தன் வெற்றிக்குப் பிறகு வெளிப்படுத்தியது தற்போது வைரலாகி வருகிறது.
<blockquote class="twitter-tweet"><p lang="und" dir="ltr">❤️<a href="https://twitter.com/AndreyRublev97?ref_src=twsrc%5Etfw">@AndreyRublev97</a> <a href="https://t.co/Ul9Hg8SRvS">pic.twitter.com/Ul9Hg8SRvS</a></p>— ATP Tour (@atptour) <a href="https://twitter.com/atptour/status/1497253478586015751?ref_src=twsrc%5Etfw">February 25, 2022</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>