கப்பல்கள் மோதல்: மூழ்கியது ரஷ்ய போர்க்கப்பல்

கப்பல்கள் மோதல்: மூழ்கியது ரஷ்ய போர்க்கப்பல்

கப்பல்கள் மோதல்: மூழ்கியது ரஷ்ய போர்க்கப்பல்
Published on

சரக்குக் கப்பலுடன் மோதிய விபத்தில் ரஷ்ய போர்க்கப்பல் கடலில் மூழ்கியது.

துருக்கி கடற்பகுதியில் இஸ்தான்புல் அருகே ரஷ்ய போர்க்கப்பல் ஒன்று சென்றுகொண்டிருந்தது. மூடு பனியாக இருந்ததால் எதிரே இருந்த எதுவும் தெரியவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் 8,800 ஆடுகளை ஏற்றிக்கொண்டு சரக்கு கப்பல் ஒன்று ரொமானியாவில் இருந்து ஜோர்டானுக்கு சென்றுகொண்டிருந்தது. எதிர்பாராத விதமாக இரண்டு கப்பல்களும் மோதின. இதில் ரஷ்ய போர்க்கப்பல் பலத்த சேதம் அடைந்து கடலில் மூழ்கியது. அந்தக் கப்பலில் இருந்த 78 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதுபற்றி ரஷ்யா விசாரித்து வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com