ரஷ்ய அதிபர் தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்தார் புதின்
ரஷ்யாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலுக்காக அதிபர் விளாடிமிர் புதின் வேட்புமனு தாக்கல் செய்தார்.
ரஷ்யாவில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ள அதிபர் தேர்தல் உலகளவில் பெரும் ஏதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த தேர்தலில் புதின் மீண்டும் போட்டியிடுவதற்கு ஆதரவுகள் தொடர்ந்து பெருகி வருகின்றன. இதைத் தொடர்ந்து அதிபர் புதின் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். ஓரிரு நாட்களுக்குள் அவரது வேட்புமனு ஏற்றுக் கொண்டதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு குறைந்தபட்சம் 500 பேர் அவரது பெயரை முன்மொழிய வேண்டும் என்ற நிலையில், ஏற்கனவே அவருக்கு 668-க்கும் மேற்பட்ட முக்கிய பிரபலங்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர். இந்நிலையில், வேட்புமனு தாக்கலுக்கு பின்பு, மக்களிடையே புதினுக்கு மேலும் ஆதரவு பெருகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.