இந்தியா - பாகிஸ்தான்fb
உலகம்
இந்தியா - பாகிஸ்தான் சண்டையை அமெரிக்க அதிபரே நிறுத்தினார்... ரஷ்யா அதிபரின் கருத்து!
பாகிஸ்தானுடன் சண்டை நிறுத்தம்: ட்ரம்பின் தனிப்பட்ட முயற்சி! -ரஷ்யா
இந்தியா - பாகிஸ்தான் சண்டையை அமெரிக்க அதிபர் ட்ரம்பே
நிறுத்தியதாக, ரஷ்யா கூறியுள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்பும் -ரஷ்ய அதிபர் புதினும், தொலைபேசி வாயிலாக 70 நிமிடங்கள்
உரையாடியுள்ளனர்.
இதுதொடர்பாக ஊடகங்களுக்கு பேட்டியளித்த புதினின் மூத்த உதவியாளர் யூரி உஷாகோவ், இருவரும் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான ஆயுத மோதல் குறித்தும் விவாதித்தாக தெரிவித்தார். இந்த மோதல், ட்ரம்பின் தனிப்பட்ட தலையீட்டால் நிறுத்தப்பட்டது எனவும் குறிப்பிட்டார். பாகிஸ்தானுடான சண்டை நிறுத்தத்தில் அமெரிக்காவிற்கு பங்கு இல்லை என, மத்திய அரசு தொடர்ந்து கூறி வருவது
குறிப்பிடத்தக்கது.