\
russian missile drone attack in ukraine kyiv
Model imagegoogle gemeni

39 ஏவுகணைகள்.. 120 ட்ரோன்கள்.. இருளில் 6 லட்சம் மக்கள்.. ஒரேநாளில் உக்ரைனை முடித்த ரஷ்யா!

இத்தாக்குதலைத் தொடர்ந்து, உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்கவும், பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்புகளை உடனடியாக வழங்கவும் சர்வதேச நாடுகளுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
Published on: 

ரஷ்ய ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் கீவ் நகரைத் தாக்கியதில், ஒன்பது மாடிக் குடியிருப்பு கட்டிடம் தீப்பிடித்து எரிந்தது. இந்த தாக்குதலில் குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்திருப்பதாகவும், 21 பேர் காயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேட்டோ நாடுகளில் இணையக்கூடாது என்பதற்காக உக்ரைன் மீது ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் போர் தொடுத்தது. அது 4 ஆண்டுகளைக் கடந்தும் இன்றுவரை நடைபெற்று வருகிறது. ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பிற்கு எதிராக உக்ரைனும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில், ரஷ்ய ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் கீவ் நகரைத் தாக்கியதில், ஒன்பது மாடிக் குடியிருப்பு கட்டிடம் தீப்பிடித்து எரிந்தது.

உக்ரைனின் எரிசக்தித் துறை மற்றும் தலைநகரம், அதைச் சுற்றியுள்ள கீவ் பகுதி, கார்கிவ் ஆகிய இடங்களில் உள்ள முக்கிய உள்கட்டமைப்புகளுக்கு எதிராக ரஷ்யா 39 பாலிஸ்டிக் ஏவுகணைகளையும், 120-க்கும் மேற்பட்ட தாக்குதல் ட்ரோன்களையும், வட்டமிடும் வெடிமருந்துகளையும் பயன்படுத்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

தரைவழி ஏவுகணைகள் மற்றும் நீண்ட தூரத் தாக்குதல் ட்ரோன்களைப் பயன்படுத்தி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அது தெரிவித்தது. இந்த தாக்குதலில் குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்திருப்பதாகவும், 21 பேர் காயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த தாக்குதலால், உக்ரைனின் மின்சார உற்பத்தி வளாகத்தின் 26 பிரிவுகளிலும், அதன் எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறையின் நான்கு ஆலைகளிலும் உள்ள வசதிகள் மற்றும் உபகரணங்களுக்குக் கணிசமான சேதம் ஏற்பட்டுள்ளது.

ரஷ்ய ஆயுதப் படைகள் குறித்த உளவுத் தகவல்களைச் சேகரிக்கப் பயன்படுத்தப்படும் கீவ் நகரில் உள்ள ஒரு தரவு மையமும் தாக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தச் சேதங்களின் விளைவாக, குறைந்தது 600,000 மக்கள் மின்சாரமின்றி தவிக்கின்றனர். மேலும், 24 மணி நேரத்தில் கீவ் மீது நடத்தப்பட்ட இரண்டாவது தாக்குதல் இதுவாகும். இத்தாக்குதலைத் தொடர்ந்து, உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்கவும், பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்புகளை உடனடியாக வழங்கவும் சர்வதேச நாடுகளுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com