\
நூலிழையில் உயிர்தப்பிய குழந்தை (வீடியோ)

நூலிழையில் உயிர்தப்பிய குழந்தை (வீடியோ)

நூலிழையில் உயிர்தப்பிய குழந்தை (வீடியோ)
Published on: 

ரஷ்யாவில் சாலையை அஜாக்கிரதையாக கடக்க முயன்ற பெண் ஒருவர் நூலிழையில் தனது கைக்குழந்தையுடன் உயிர்தப்பிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 

ரஷ்யாவின் தென் மேற்கு பகுதியில் உள்ள ரோஸ்டவ் பகுதியில் இளம்வயது தாயார் ஒருவர் தனது கைக்குழந்தையுடன் நெடுஞ்சாலையை கடக்க முயலும் போது, அசுர வேகத்தில் டிரக் ஒன்று அவர்களை கடந்து சென்றது. இந்த சம்பவத்தின் போது நூலிழையில் கைக்குழந்தை உயிர்தப்பியது. நொடிப்பொழுதில் நடைபெற்ற இந்த சம்பவத்தை உணர்ந்து இளம்பெண்ணும் அவர்களது குடும்பத்தினரும் ஒரு சில நிமிடம் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். இந்த வீடியோ காட்சிகள் சாலையில் சென்றுக்கொண்டிருந்த காரின் டாஷ் போர்ட் கேமிராவில் பதிவானது குறிப்பிடத்தக்கது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com