”பொருளாதாரத் தடைகளால் சர்வதேச விண்வெளி நிலையம் பூமி மீது விழலாம்” - ரஷ்யா எச்சரிக்கை

”பொருளாதாரத் தடைகளால் சர்வதேச விண்வெளி நிலையம் பூமி மீது விழலாம்” - ரஷ்யா எச்சரிக்கை
”பொருளாதாரத் தடைகளால் சர்வதேச விண்வெளி நிலையம் பூமி மீது விழலாம்” - ரஷ்யா எச்சரிக்கை

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 17-வது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது. உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு தடைகளை உலக நாடுகள் ரஷ்யாவுக்கு விதித்து உள்ளன. அமெரிக்காவின் பணப்பட்டுவாடா நிறுவனங்களான விசா மற்றும் மாஸ்டர் கார்டு ஆகியவை ரஷ்யாவில் தங்களுடையை சேவையை நிறுத்தி உள்ளன. மேலும் பேஸ்புக், ட்விட்டர், டிக் டாக், அமேசான்,சோனி மியூசிக் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் தங்களுடைய சேவைகளை ரஷ்யாவில் நிறுத்தி வைத்துள்ளன.

இந்நிலையில் தங்கள் மீதான மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடைகளால் சர்வதேச விண்வெளி நிலையம் செயலிழக்கக்கூடும் என ரஷ்ய விண்வெளி அமைப்பின் தலைவர் எச்சரித்துள்ளார். இதுகுறித்து ரஷ்ய விண்வெளி அமைப்பின் தலைவர் டிமிட்ரி ரோகோசினின், “இந்த பொருளாதார தடைகளால் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சேவை செய்யும் ரஷ்ய விண்வெளி கப்பல்களின் செயல்பாட்டை சீர்குலையும். இதன் விளைவாக, விண்வெளி நிலையத்தின் சுற்றுப்பாதையை சரிசெய்ய உதவும் ரஷ்ய பிரிவு பாதிக்கப்படலாம், இதனால் 500-டன் கட்டமைப்பு கொண்ட சர்வதேச விண்வெளி நிலையம் கடல் அல்லது நிலத்தில் வந்து விழும்" என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com