ரஷ்யா -உக்ரைனை சூழ்ந்த போர் மேகங்கள்: திசைமாறிச் செல்லும் விமானங்கள்

ரஷ்யா -உக்ரைனை சூழ்ந்த போர் மேகங்கள்: திசைமாறிச் செல்லும் விமானங்கள்
ரஷ்யா -உக்ரைனை சூழ்ந்த போர் மேகங்கள்: திசைமாறிச் செல்லும் விமானங்கள்

உக்ரைனின் கியேவ் வான்வெளியை மூடிய பிறகு நூற்றுக்கணக்கான விமானங்கள் திசைமாறிச் செல்வதை டிராக்கர் மூலம் கண்காணிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போரை அறிவித்துள்ளது. இதனால் கிவ் பகுதியில், பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக விமானங்கள் பறப்பதற்கு தடைவிதிக்கப்பட்டு வான்வெளி மூடப்பட்டுள்ளது. ரஷ்யா மற்றும் பெலாரஸின் எல்லையோரப் பகுதிகளில் இராணுவ நடவடிக்கைகள் அதிகரித்துள்ள நிலையில், அங்கு பறப்பதற்கு எதிராக ஐரோப்பாவின் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் எச்சரித்துள்ளது. உக்ரைனில் வியாழக்கிழமை முதல் ஜிஎஸ்டி முதல் சிவிலியன் விமானங்களுக்கான நாட்டின் வான்வெளியை மூடியது.

மேலும் நாட்டில் விமான போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.ஃப்ளைட் டிராக்கர் மென்பொருளின் படம், உக்ரைன் வான்வெளியை மூடிய பிறகு நூற்றுக்கணக்கான விமானங்கள் திருப்பி விடப்பட்டதைக் காட்டுகிறது. ஐரோப்பிய யூனியன் ஏவியேஷன் சேஃப்டி ஏஜென்சியும் (EASA)ரஷ்யா-உக்ரைன் மோதல் பாதுகாப்பு அபாயத்தை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com