மின் கட்டமைப்புகளை குறிவைத்து தாக்கும் ரஷ்யா! 70 ஏவுகணைகளால் இருளில் மூழ்கிய உக்ரைன்!

மின் கட்டமைப்புகளை குறிவைத்து தாக்கும் ரஷ்யா! 70 ஏவுகணைகளால் இருளில் மூழ்கிய உக்ரைன்!
மின் கட்டமைப்புகளை குறிவைத்து தாக்கும் ரஷ்யா! 70 ஏவுகணைகளால் இருளில் மூழ்கிய உக்ரைன்!

உக்ரைனில் மின்சார உள்கட்டமைப்புகளை குறிவைத்து ரஷ்யா நடத்தி வரும் வான் வழி தாக்குதல்களை நிறுத்துமாறு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிவுறுத்த வேண்டும் என உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கேட்டுக் கொண்டுள்ளார்.

குளிர்காலம் தொடங்கியிருக்கும் சூழலில், உக்ரைனில் மின்சார உள்கட்டமைப்புகளை குறிவைத்து ரஷ்ய போர் விமானங்கள் வான்வழி தாக்குதல் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனால், ஏராளமான வீடுகள் இருளில் மூழ்கியிருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. இந்தச் சூழலில், முக்கியமான உள்கட்டமைப்புகளை குறிவைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதை நிறுத்துமாறு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிவுறுத்த வேண்டும் என உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக காணொலி வெளியிட்டிருக்கும் அவர், 70 ஏவுகணைகள் வீசி ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதாகவும், மருத்துவமனைகள், பள்ளிகள், போக்குவரத்து மற்றும் மின்சார உள்கட்டமைப்புகள் இந்த தாக்குதலில் சேதமடைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் 70 ஏவுகனைகளின் தாக்குதலிற்கு பிறகு உக்ரைனின் பெருபகுதிகள் இருளில் மூழ்கி காணப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com