ஐரோப்பிய செயற்கைக்கோள் திட்டங்களை நிறுத்தியது ரஷ்யா

ஐரோப்பிய செயற்கைக்கோள் திட்டங்களை நிறுத்தியது ரஷ்யா
ஐரோப்பிய செயற்கைக்கோள் திட்டங்களை நிறுத்தியது ரஷ்யா

ரஷ்யாவுக்கு பொருளாதாரத் தடை விதித்த ஐரோப்பிய நாடுகளின் செயற்கைக்கோள் திட்டங்களை மேற்கொள்வதை ரஷ்ய விண்வெளி ஆய்வு மையம் நிறுத்தி வைத்துள்ளது.

ரஷ்யாவின் விண்வெளி ஆய்வு மையமான ராஸ்காஸ்மோஸ் இதை அறிவித்துள்ளது. தென்அமெரிக்காவின் ப்ரெஞ்ச் கயானாவில் இருந்து ரஷ்யாவின் சோயுஸ் ராக்கெட்டுகள் மூலம் ஐரோப்பிய நாடுகளின் செயற்கைக்கோள்கள் விண்வெளியில் ஏவப்படுவது வழக்கம். கடந்த 10ஆம் தேதிதான் கடைசியாக சோயுஸ் ராக்கெட்டுகள் மூலம் ஐரோப்பிய நாடுகளின் 30 செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டன.

அமெரிக்காவின் நாசா, ஐரோப்பாவின் இஎஸ்ஏ ஆகிய விண்வெளி ஆராய்ச்சி மையங்களுடன் நெருக்கமாக ரஷ்யா பணியாற்றி வருகிறது. இந்நிலையில், உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா மீது ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத் தடை விதித்ததால், ஐரோப்பிய நாடுகளின் செயற்கைக்கோள்களை ஏவும் திட்டங்களை ராஸ்காஸ்மோஸ் நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com