கரடி என நினைத்து சக மனிதரை சுட்டுக் கொன்ற ரஷ்ய அரசியல் பிரமுகர் இகோர் ரெட்கின்
ரஷ்ய நாட்டில் பிரவுன் நிற கரடி என கருதி சக மனிதரை சுட்டுக் கொன்றுள்ளார் அந்நாட்டு அரசியல் பிரமுகர் இகோர் ரெட்கின். நாட்டிலேயே உள்ள பணக்கார அரசியல் பிரமுகர்களில் அவரும் ஒருவர். இந்த சம்பவம் கடந்த 10-ஆம் தேதி அங்குள்ள கம்சட்கா (Kamchatka) பிராந்தியத்தின் ஒஸெர்னோவ்ஸ்கி (Ozernovsky) பகுதியில் நடைபெற்றுள்ளது.
அந்தப் பகுதியில் வெகு நாட்களாக மக்களை கரடி ஒன்று அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று அந்தி சாய்ந்த வேளையில் குப்பைத்தொட்டி அருகே அந்த கரடி நிற்பதாக கருதி தவறுதலாக சக மனிதரை சுட்டுக் கொன்றுள்ளார் இகோர் ரெட்கின். இதனை அவரே போலீசில் தெரிவித்துள்ளார். தற்போது இரண்டு மாத காலம் வீட்டுக் காவலில் அவர் வைக்கப்பட்டுள்ளார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தனது கட்சி பொறுப்புகளிலிருந்து தன்னை விடுவிக்குமாறும், அடுத்து வரும் தேர்தலில் போட்டியிட போவதில்லை எனவும் அவர் அங்கம் வகித்த கட்சிக்கு கடிதமும் எழுதி உள்ளார். அவர் United Russia கட்சியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.