russia president putin explain on asked why russia Is not helping Iran
world chiefsx page

ஈரானை தாக்கிய அமெரிக்கா.. ரஷ்யா களமிறங்காதது ஏன்?.. புதின் கொடுத்த விளக்கம்!

அமெரிக்கா ஈரானின் அணுசக்தி தளங்களை குறிவைத்த பிறகும், ரஷ்யா ஈரானை நேரடியாகக் காப்பாற்றுவதற்குப் பதிலாக ஏன் ஒதுங்கி நிற்கிறது என்பது குறித்து அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் விளக்கம் அளித்துள்ளார்.
Published on

அணு ஆயுத விவகாரம் தொடர்பாக, ஈரானைக் குறிவைத்து இஸ்ரேல் கடந்த சில நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. அதாவது, அணு ஆயுதத்தைத் தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி ஈரான் மீது 'ஆபரேஷன் ரைசிங் லயன்' என்ற பெயரில் கடந்த ஜூன் 13ஆம் தேதி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்குப் பதிலடியாக ஈரானுமும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. தற்போது இருநாடுகளும் மாறிமாறி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கிடையே, இஸ்ரேலுக்கு ஆதரவாகக் களத்தில் குதித்துள்ள அமெரிக்காவும், ஈரானைத் தாக்கியது. ’ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்’ என்ற பெயரில் அமெரிக்கா, 14,000 கிலோ எடையுள்ள குண்டை ஈரானின் நிலத்தடி அணுசக்தி நிலையங்களுக்குள் ஊடுருவியது.

russia president putin explain on asked why russia Is not helping Iran
Iran, trumpx page

இதனால், ஈரானின் அணுசக்தி மையங்களான ஃபோர்டோ, நடான்ஸ், மற்றும் இஸ்பஹான் ஆகிய மூன்று தளங்கள் அமெரிக்கப் படைகளால் வெற்றிகரமாக தாக்குதல் நடத்தப்பட்டது என அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்திருந்தார். அதேநேரத்தில், அணு சக்தி நிலையங்கள் மீதான அமெரிக்காவின் தாக்குதலைக் கண்டித்து ஈரான் ஐநா சபையில் கடிதம் ஒன்றை சமர்பித்தது. தவிர, பல்வேறு நாடுகளும் அமெரிக்காவின் தாக்குதலுக்குத் தனது கண்டனங்களை தெரிவித்திருந்தன. எனினும், இந்தத் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என ஈரானின் உச்சபட்ச தலைவர் அலி கமேனி தெரிவித்துள்ளார்.

russia president putin explain on asked why russia Is not helping Iran
கண்டனம் தெரிவிக்கும் பாகிஸ்தான்... ஐநாவை நாடும் ஈரான்... அமெரிக்க தாக்குதலில் அடுத்தடுத்த நிகழ்வுகள்

இந்த நிலையில், அமெரிக்கா ஈரானின் அணுசக்தி தளங்களை குறிவைத்த பிறகும், ரஷ்யா ஈரானை நேரடியாகக் காப்பாற்றுவதற்குப் பதிலாக ஏன் ஒதுங்கி நிற்கிறது என்பது குறித்து அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் விளக்கம் அளித்துள்ளார். ரஷ்யாவும் ஈரானும் பல தசாப்தங்களாக நெருங்கிய உறவுகளைக் கொண்டிருந்தாலும், ஏராளமான ரஷ்ய மொழி பேசும் மக்கள் இஸ்ரேலில் வசிப்பதால், மோதலில் நடுநிலை வகிக்க முயற்சிக்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மேலும் அவர், "முன்னாள் சோவியத் யூனியன் மற்றும் ரஷ்ய கூட்டமைப்பிலிருந்து கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் மக்கள் இஸ்ரேலில் வசிக்கிறார்கள் என்பதை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

இன்று அது கிட்டத்தட்ட ரஷ்ய மொழி பேசும் நாடாகும். மேலும், சந்தேகத்திற்கு இடமின்றி, ரஷ்யாவின் சமகால வரலாற்றில் இதை நாங்கள் எப்போதும் கணக்கில் எடுத்துக்கொள்கிறோம். அரபு நாடுகள் மற்றும் இஸ்லாமிய நாடுகளுடனான ரஷ்யாவின் உறவுகள் நீண்ட காலமாக நட்பாக இருந்து வருவதாகவும், ரஷ்யாவின் மக்கள் தொகையில் 15 சதவீதம் பேர் முஸ்லிம்கள் என்றும், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பில் (OIC) ரஷ்யாவும் ஒரு பார்வையாளராக இருக்கிறது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

russia president putin explain on asked why russia Is not helping Iran
“என்ன ஆனாலும் நாங்கள் நிறுத்தமாட்டோம்” அமெரிக்காவுக்கு ஈரானின் பதில்..

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com