ரஷ்யா - உக்ரைன்
ரஷ்யா - உக்ரைன் முகநூல்

உக்ரைன் மீது ஒரே சமயத்தில் 260 டிரோன்களை ஏவி ரஷ்யா பயங்கர தாக்குதல்!

ரஷ்யா அனுப்பிய 260 டிரோன்களில் 140 டிரோன்களை உக்ரைன் வான் பாதுகாப்பு படை சுட்டு வீழ்த்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
Published on

உக்ரைன் மீது ஒரே சமயத்தில் 260 டிரோன்களை ஏவி ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது. போர் தொடங்கி 3வது ஆண்டில் இப்படி ஒரு தாக்குதலை முன்னெடுத்துள்ளது. ரஷ்யா அனுப்பிய 260 டிரோன்களில் 140 டிரோன்களை உக்ரைன் வான் பாதுகாப்பு படை சுட்டு வீழ்த்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேட்டோவில் உறுப்பினராக ஆக வேண்டுமென உக்ரைன் விரும்பியது. ஆனால் இதற்கு ரஷ்யா மறுப்பு தெரிவித்தது . மேலும், உக்ரைன் மீது கடந்த 2022ஆம் ஆண்டு ரஷ்யா தாக்குதல் நடத்தியது.

இதனையடுத்து இரண்டு நாடுகளுக்கும் இடையே கடந்த 3 ஆண்டுகாலமாக போர் நடந்து வருகிறது. போரை தடுக்க உலக நாடுகளும் முயற்ச்சி செய்து வருகின்றன. 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ல் தொடங்கிய போர் 3 ஆண்டுகாலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது ரஷ்யா மீண்டும் உக்ரைன் பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளது.

அதாவது ரஷ்யா உக்ரைனை மிகப்பெரிய ஒற்றை ட்ரோன் தாக்குதலால் தாக்கியுள்ளது. 267 ரஷ்ய ட்ரோன்கள் ஒரே நேரத்தில் ஏவப்பட்டு தாக்குதல் நடைபெற்றதாக உக்ரைனின் விமானப்படை அதிகாரிகள் தகவல் தெரிவிகின்றனர். உக்ரைன் முழுவதும் கார்கிவ், பொல்டாவா, சுமி, கீவ், செர்னிஹிவ், மைகோலைவ் மற்றும் ஒடேசா உள்ளிட்ட குறைந்தது 13 பகுதிகளில் ட்ரோன்கள் இடைமறிக்கப்பட்டதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த வகையில் ரஷ்யா ஏவிய 260 ட்ரோன்களில் 140 ட்ரோன்களை உக்ரைன் வான் பாதுகாப்பு படையினர் இடைமறித்து சுட்டு வீழ்த்தியதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

ரஷ்யா - உக்ரைன்
இத்தாலி | போப் பிரான்சிஸ் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்!

உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி ஞாயிற்றுக்கிழமை இதுகுறித்து பேசியபோது, ரஷ்யா ஒரே இரவில் 200க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஏவியதாகவும், இது போரின் மிகப்பெரிய தாக்குதல் என்றும் கூறினார். ரஷ்யாவின் வான்வழி தாக்குதலை அவர் கண்டித்து, உக்ரைனின் நட்பு நாடுகளிடையே ஒற்றுமைக்கு அழைப்பு விடுத்தார். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் தொடங்கியதில் இருந்து நடத்தப்பட்ட தாக்குதலில் இது பயங்கரமான தாக்குதல் எனவும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com