\
Russia is set to major initiative aimed at  end to the NATO alliance
Putin aimed NatoReuters

நேட்டோவுக்கு முடிவு கட்டத் திட்டம்: ரஷ்யா-வின் மாஸ்டர் பிளான் என்ன? அதிர்ச்சியில் ஐரோப்பிய நாடுகள் !

நேட்டோ அமைப்புக்கு முடிவு கட்டும் வகையில் முக்கிய திட்டத்தை ரஷ்யா கையிலெடுக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
Published on: 

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, கம்யூனிச கொள்கையை பின்பற்றிய சோவியத் யூனியனை எதிர்கொள்ள முதலாளித்துவ நாடுகளான அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோபியா நாடுகள் இணைந்து நேட்டோ அமைப்பை (NATO) உருவாக்கின. உறுப்பு நாடுகளில் ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டாலும், அது அனைத்து நாடுகளின் மீதான தாக்குதலாகக் கருதப்பட்டு கூட்டு ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்பது இந்த அமைப்பின் முக்கிய விதியாக உள்ளது.

நேட்டோவுக்குப் போட்டியாகச் சோவியத் யூனியன் 1955-இல் தனது ஆதரவு நாடுகளைச் சேர்த்து 'வார்சா ஒப்பந்த அமைப்பை' (Warsaw Pact) உருவாக்கியது. இதுவே பனிப்போருக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.

NATO Countries
NATO CountriesReuters

பின்னர் பல்வேறு பொருளாதார சிக்கல்கள் மற்றும் உள்நாட்டு குழப்பங்கள் காரணமாக 1991-ம் ஆண்டு சோவியத் ஒன்றியம் சிதறி பல்வேறு நாடுகளாக பிரிந்தது. சோவியத் ஒன்றியம் சிதறியபோது நேட்டோ அமைப்பை மேலும் கிழக்கு நோக்கி விரிவாக்க மாட்டோம் என அமெரிக்கா தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதாக ரஷ்யா கூறி வருகிறது.

ஆனால் அதன் பின்னர் வார்சா அமைப்பில் இருந்த முன்னாள் கம்யூனிச நாடுகளான போலந்து, செக் குடியரசு, ஹங்கேரி போன்ற நாடுகளையும், ஏராளமான கிழக்கு ஐரோப்பிய நாடுகளையும் அமெரிக்கா நேட்டோவில் இணைத்தது.

நேட்டோ அமைப்பின் இந்த விரிவாக்கத்தை சோவியத் அமைப்பில் இருந்து பிரிந்த மிகப்பெரிய நாடான ரஷ்யா தனது அச்சுறுத்தலாக பார்த்தது. இந்த சூழலில் ரஷ்யாவின் எல்லைப்புற நாடான உக்ரைன் நேட்டோவில் இணைய ஆர்வம் காட்டியது. இதன் காரணமாக கடந்த 2022-இல் உக்ரைன் மீது போரைத் தொடங்கியது.

இந்த போர் தற்போதுவரை முடிவடையாத நிலையில், உக்ரைனின் பல்வேறு பகுதிகள் ரஷ்யாவின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன. இந்த சூழலில் ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு தரப்பும் போர் நிறுத்தம் செய்யவேண்டும் என அமெரிக்கா பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

இதனை பயன்படுத்தி கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோ அமைப்பின் ராணுவப் பலத்தைக் கணிசமாகக் குறைக்க ரஷ்யா புதிய நிபந்தனைகளை முன்வைக்கத் திட்டமிட்டுள்ளதாக உக்ரைனின் முக்கிய இதழான கீவ் போஸ்ட் (KYIV POST) செய்தி வெளியிட்டுள்ளது.

Reuters

அந்த செய்தியில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட வேண்டுமானால் ஐரோப்பியப் பிராந்தியத்தின் பாதுகாப்பு கட்டமைப்பில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் என ரஷ்யா விரும்புகிறது என்று கூறப்பட்டுள்ளது. இதற்காக போரை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்ற அமெரிக்காவின் தீவிரத்தை பயன்படுத்தி 1997-ஆம் ஆண்டுக்குப் பிறகு நேட்டோ அமைப்பில் இணைந்த போலந்து, பால்டிக் நாடுகள் மற்றும் பின்லாந்து போன்ற நாடுகளில் இருந்து நேட்டோ படைகளை திரும்பப்பெற வேண்டும் என நிபந்தனையை ரஷ்யா முன்வைக்க திட்டமிட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே அமெரிக்க அதிபர் டிரம்ப் நேட்டோ அமைப்பை கடுமையாக விமர்சித்து அதிலிருந்து அமெரிக்கா வெளியேறவேண்டும் என்று கூறி வரும் நிலையில், கீவ் போஸ்ட் இதழின் இந்த செய்தி முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.

Russia is set to major initiative aimed at  end to the NATO alliance
இஸ்ரேல் தேர்தலில் அதிரடி ட்விஸ்ட் : எழுச்சி பெற்ற அரபு கூட்டணி.. அதிரடி முடிவை எடுத்த இடதுசாரிகள்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com