\
ukraine
ukrainereuters

இரக்கமே காட்டாத புதின்! அலையாக பாய்ந்த ஏவுகணைகள்! உருக்குலைந்து போன உக்ரைன்!

உக்ரைன் மீது ரஷ்யாவின் படைகள் மிகமோசமான தாக்குதல்களை நடத்தியுள்ளது.
Published on: 

செய்தியாளர் - கார்த்திகேயன்

உக்ரைன் கட்டுப்பாட்டில் இருந்த கிரிமியா என்ற பகுதியை, பல வருடங்களுக்கு முன்பு ஆக்கிரமித்த ரஷ்யா, அங்கு தனது ராணுவ தளங்களை அமைத்து வைத்துள்ளது. மேலும், ரஷ்யாவையும், கிரிமியாவையும் இணைப்பதற்காக, பாலம் ஒன்றும் கட்டப்பட்டு இருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு, இந்த பாலத்தின் மீது உக்ரைன் தாக்குதலை நடத்தியிருந்தது. இதற்கு மிக கடுமையான பதிலடி தரப்படும் என்று ரஷ்ய அதிபர் புதின் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், உக்ரைனின் தலைநகர் கீவ், எல்விவ், கார்கிவ் ஆகிய பகுதிகளில், ரஷ்யா தாக்குதலை நடத்தியுள்ளது.

இதுவரை நடத்தப்பட்ட தாக்குதல்களில் இதுவொரு மிகமோசமான தாக்குதல்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதாவது, ரஷ்யா ஒரு இரவில் சுமார் 100 ஏவுகணைகளையும், சுமார் 400-க்கும் மேற்பட்ட ட்ரோன்களையும் ஏவி, உக்ரைனை உருக்குலைய வைத்துள்ளது. பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், 8 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 28 பேர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. குறிப்பாக, கீவ் நகரில் டினிப்ரோ ஆற்றின் குறுக்கே உள்ள போடில்ஸ்கோ- வோஸ்க்ரெசென்ஸ்கி, டார்னிட்ஸ்கி, தெற்கு பாலம் ஆகிய 3 பாலங்கள் பெரும் சேதங்களை சந்தித்துள்ளன. இதனால், அந்த பாலங்கள் மூடப்பட்டுள்ளன. இதேபோல், மேற்கு உக்ரைனில் உள்ள ஸ்னிலிவ் ரயில் நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், டிக்கெட் முணையம் உருக்குலைந்துள்ளது.

ukraine
ukraineReuters

மேலும், கார்கிவ் பகுதியில் உள்ள மருத்துவ மையம் ஒன்றின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, ரஷ்ய ஏவுகணை ஒன்று உக்ரைன் எல்லையில் இருந்து சுமார் 45 கிலோ மீட்டர் தொலைவில் போலந்து பகுதிக்குள் விழுந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து, எல்லைப் பகுதியில், போர் விமானங்களை போலந்து ராணுவம் நிலைநிறுத்தியுள்ளது. உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தையில் ரஷ்யாவுடன் இணையத் தயார் என பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் கூறிய சில மணி நேரங்களிலேயே இத்தாக்குதல் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.