\
ரஷ்ய வணிக வளாகத்தில் தீவிபத்து: 37 பேர் பரிதாப பலி

ரஷ்ய வணிக வளாகத்தில் தீவிபத்து: 37 பேர் பரிதாப பலி

ரஷ்ய வணிக வளாகத்தில் தீவிபத்து: 37 பேர் பரிதாப பலி
Published on

ரஷ்யாவில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 37 பேர் உயிரிழந்தனர்.

ரஷ்யாவின் கெமெரோவோ நகரில் உள்ள வின்டர் செர்ரி வணிக வளாகத்தின், மேல் தளத்தில் தீவிபத்து ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக வளாகத்தில் உள்ள இரு தியேட்டர்களின் மேற்கூரைகள் இடிந்து விழுந்ததாகவும் தகவல் வெளியாகியு ள்ளது. இதில் சிக்கி உயிரிழந்தவர்களில் 15 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

மேல்தளத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் பரவிய தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் 62 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப் பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 250க்கும் அதிகமான பேரிடர் மீட்புப் பணியாளர்கள் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி களில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

2013 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த வணிக வளாகத்தில் திரை அரங்குகள், சிறுவர் பூங்கா, உணவு விடுதிகள் போன்றவை உள்ளன. வணிக வளாகத்தில் இருந்து நூறுக்கும் அதிகமான மக்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com