சிரியா போர் முடிவை நெருங்கி விட்டது: ரஷ்ய அமைச்சர் தகவல்
சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டுப் போர் முடிவை நெருங்கி வருவதாக ரஷ்ய ராணுவ அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சிரியாவில் அதிபர் ஆசாத் படைகளுக்கும், ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கும் இடையேயான உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. சிரியாவின் ராக்கா நகரை தலைமையிடமாகக் கொண்டு ஐ.எஸ். பயங்கரவாதிகள் போரிட்டு வருகின்றனர். அந்த நகரை மீட்க வேண்டும் என அதிபர் ஆசாத்தின் படைகள் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்நிலையில் சிரியாவின் உள்நாட்டு போர் தொடர்பாக ரஷ்ய ராணுவ அமைச்சர் செர்கெய் ஷோகு கருத்து தெரிவித்துள்ளார். இஸ்ரேல் சென்ற அவர், அந்நாட்டின் ராணுவ அமைச்சர் அவிக்தார் லைபெர்மனை சந்தித்து சிரியாவில் நடக்கும் போர் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சிரியாவில் நடக்கும் உள்நாட்டு போர் முடியும் கட்டத்தை நெருங்கிவிட்டதாக கூறினார்.