சிரியாவில் கடற்படை மற்றும் விமானப் படை தளங்களை அமைக்க ரஷ்யா முடிவு செய்துள்ளது.
சிரியாவில் நிரந்தரமாக தனது ராணுவத்தை நிறுத்த ரஷ்யா முடிவு செய்துள்ளது. அதற்கான ஒப்பந்தம் இரு நாட்டுக்கும் இடையே விரைவில் கையெழுத்தாகவுள்ளது. அதன்பின் சிரியாவில் இருக்கும் டார்டஸ் கடற்படை தளம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதன்மூலம் அணு ஆயுதம் தாங்கிய போர்க் கப்பல்கள் உள்பட 11 போர்க் கப்பல்களை அங்கு நிறுத்த முடியும்.
சுமார் 49 ஆண்டுகளுக்கு அந்த ஒப்பந்தம் நீடிக்கும். சிரிய அதிபர் பஷார் அல் அசாத்துக்கு ஆதரவான போரின் போது மெய்மிம் விமானப் படை தளத்தில் இருந்துதான் ரஷ்யா போர் விமானங்களை இயக்கியது. இந்த ஒப்பந்தம் மூலம் அந்த விமானப் படை தளமும் இனி ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் வரும் என தெரியவந்துள்ளது.