'ரஷ்யாவுக்கு ஆதரவாக போரிட தயாராக இருக்கிறோம்' - சிரியா ராணுவம் அறிவிப்பு

'ரஷ்யாவுக்கு ஆதரவாக போரிட தயாராக இருக்கிறோம்' - சிரியா ராணுவம் அறிவிப்பு

'ரஷ்யாவுக்கு ஆதரவாக போரிட தயாராக இருக்கிறோம்' - சிரியா ராணுவம் அறிவிப்பு
Published on

உக்ரைனில் ரஷ்யாவுக்கு ஆதரவாக போரிட எந்நேரமும் தயாராக இருப்பதாக சிரியா நாட்டின் ராணுவம் அதிரடியாக அறிவித்துள்ளது.

உக்ரைன் மீது கடந்த மாதம் 24-ம் தேதி ரஷ்யா படையெடுத்தது. உக்ரைனில் ரஷ்ய மொழி பேசும் சிறுபான்மையினர் இனப்படுகொலை செய்யப்படுவதாக கூறி இந்த ராணுவ நடவடிக்கையை ரஷ்யா எடுத்தது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்து வருகிறது. நேட்டோ கூட்டமைப்பில் இணைவதை தடுக்கவே தங்கள் மீது ரஷ்யா போர் தொடுத்தாக உக்ரைன் அரசாங்கம் கூறி வருகிறது. இதனிடையே, ரஷ்ய ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் உக்ரைனின் பல நகரங்கள் சின்னாபின்னமாகி உள்ளன. நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்களும், பொதுமக்களும் உயிரிழந்துள்ளனர். பல முக்கிய நகரங்கள் ரஷ்யாவின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துவிட்டது.

இருந்தபோதிலும், உக்ரைன் தலைநகர் கீவ்வை ரஷ்ய ராணுவத்தால் கைப்பற்ற முடியவில்லை. அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளும், நேட்டோ நாடுகளும் உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை வழங்கி வருவதால் கீவ்வை நெருங்க ரஷ்ய ராணுவத்தினர் திணறி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

'போரிட தயார்' - சிரியா அறிவிப்பு

இந்நிலையில், ரஷ்ய படைகளுக்கு ஆதரவாக உக்ரைனுக்கு சென்று போரிட தாங்கள் தயாராக இருப்பதாக சிரியா நாட்டின் துணை ராணுவப் படை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சிரியாவின் தேசிய பாதுகாப்புப் படையின் (என்.டி.எஃப்) தலைமை கமாண்டர் நபில் அப்தல்லா கூறுகையில், "ரஷ்யாவுக்கு ஆதரவாக போர்புரிய மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இருந்து விருப்பப்பட்டவர்கள் வரலாம் என கடந்த வாரம் அதிபர் விளாடிமிர் புடின் அறிவித்தார். அவரது அழைப்பை ஏற்று, அங்கு சென்று உக்ரைனுக்கு எதிராக போரிட நாங்கள் தயாராக இருக்கிறோம். சிரியாவில் உள்நாட்டு கலவரத்தில் ஈடுபட்ட தீவிரவாதிகளை ஒழிக்க ரஷ்யா எங்களுக்கு உதவி செய்தது. அதற்கு கைமாறாக அவர்களுக்கு உதவுவது எங்கள் கடமை. சிரியா அரசாங்கம் மற்றும் ரஷ்யாவிடம் இருந்து அனுமதி கிடைத்தால் நாங்கள் உக்ரைனுக்கு புறப்பட்டு விடுவோம். பல ஆண்டுகளாக போரில் ஈடுபட்டு நிறைய அனுபவங்களை சிரியா வீரர்கள் பெற்றிருக்கிறார்கள். எங்களின் போர் முறையை உக்ரைன் ராணுவத்தால் சமாளிக்க முடியாது" என அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com