இலங்கை வன்முறை-மக்களை துப்பாக்கியால் சுட்ட எம்பி அடித்துக்கொலை! மேயர் வீட்டுக்கு தீ வைப்பு

இலங்கை வன்முறை-மக்களை துப்பாக்கியால் சுட்ட எம்பி அடித்துக்கொலை! மேயர் வீட்டுக்கு தீ வைப்பு
இலங்கை வன்முறை-மக்களை துப்பாக்கியால் சுட்ட எம்பி அடித்துக்கொலை! மேயர் வீட்டுக்கு தீ வைப்பு

இலங்கையில் பொதுமக்களை துப்பாக்கியால் சுட்ட இலங்கை ஆளுங்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகொரலாவை பொதுமக்கள் அடித்தே கொன்றதாகவும், அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் ஏ.எஃப்.பி செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

இலங்கையில் நீடிக்கும் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று பிரதமர் மற்றும் அதிபர் பதவி விலகக் கோரி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டு கடந்த வெள்ளியன்று நடைபெற்ற சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதமர் மகிந்த ராஜபக்சவை பதவியில் இருந்து விலகுமாறு அதிபர் கோட்டபய ராஜபக்ச வலியுறுத்தியதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில் இன்று காலையில் பிரதமர் மகிந்த இல்லத்தின் முன் நடைபெற்ற போராட்டத்தின் போது மகிந்தவின் ஆதரவாளர்கள் மக்கள் மீது தாக்குதல் நடத்தியதால் அங்கு வன்முறை வெடித்தது. அதனைத் தொடர்ந்து நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

மக்கள் வன்முறையில் ஈடுபட வேண்டாம் என்றும், பொருளாதார நெருக்கடியை தீர்க்க அரசு உறுதி பூண்டுள்ளதாகவும் மகிந்த ராஜபக்ச தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். மக்களுக்காக எந்தத் தியாகத்தையும் செய்யத் தயார் எனவும் அவர் அறிவித்திருந்தார். இந்நிலையில் பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரதமரைத் தொடர்ந்து அமைச்சர்களும் பதவி விலகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இருப்பினும் அதிபர் கோட்டாபய ராஜபக்சவும் பதவி விலக வலியுறுத்தி கொழும்புவில் மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு போராட்டக்காரர்கள் மீது காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் காரை வழிமறித்த அரசுக்கு எதிரான போராட்டக்காரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்ட எம்பி அமரகீர்த்தி அத்துகொரலா, அவர்களிடம் இருந்து தப்பியோடி அருகேயிருக்கும் கட்டடத்தில் தஞ்சமடைந்தார். அங்கும் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் சுற்றி வளைத்ததால், துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார் என ஏஎப்பி செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. 

இதற்கிடையே இலங்கை மொரட்டுவை மேயரின் வீட்டில் தாக்குதல் நடத்தி போராட்டக்காரர்கள் தீவைத்து கொளுத்தியுள்ளனர். மேலும் அரசின் ஆதரவாளர்களை ஏற்றிவந்த பேருந்துக்கு மாலிகாவத் பகுதியில் தீவைக்கப்பட்டது. இந்நிலையில் மக்களின் பாதுகாப்பிற்காகவே ராணுவத்தினர் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர் எனவும், எனவே ராணுவத்திற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என இலங்கை பாதுகாப்பு செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com