\
பஹ்ரைன் பிரதமர் ஷேக் கலீஃபா காலமானார்

பஹ்ரைன் பிரதமர் ஷேக் கலீஃபா காலமானார்

பஹ்ரைன் பிரதமர் ஷேக் கலீஃபா காலமானார்
Published on: 

பஹ்ரைனின் இளவரசர் ஷேக் கலீஃபா பின் சல்மான் அல் கலீஃபா காலமானார். உலகின் மிக நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் இவர். ஷேக் கலீஃபாவின் மறைவு செய்தியை அந்நாட்டு தேசிய ஊடகமே வெளியிட்டுள்ளது.

1935 ஆம் ஆண்டு நவம்பர் 24ம் தேதி பிறந்த இவர், 1971ம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி பஹ்ரைன் சுதந்திரம் பெற்றதிலிருந்து அந்நாட்டு பிரதமராக இருந்து வந்துள்ளார்.

84 வயதான கலீஃபா பின் சல்மான் அல் கலீஃபா உடல்நலக் குறைவு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், அமெரிக்காவின் மாயோ கிளினிக் மருத்துவமனையில் இன்று அவர் காலமானார். அமெரிக்காவிலிருந்து உடல் சொந்த வீட்டிற்கு வந்த பின் இறுதி சடங்குகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ஷேக் கலீஃபாவின் மறைவு காரணமாக அந்நாட்டு அரசு மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கவுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com