\
அமெரிக்கா: 400 ஏக்கரில் காட்டுத் தீ - கட்டுப்படுத்த திணறும் தீயணைப்புத்துறை

அமெரிக்கா: 400 ஏக்கரில் காட்டுத் தீ - கட்டுப்படுத்த திணறும் தீயணைப்புத்துறை

அமெரிக்கா: 400 ஏக்கரில் காட்டுத் தீ - கட்டுப்படுத்த திணறும் தீயணைப்புத்துறை
Published on: 

அமெரிக்காவின் தெற்கு கலிஃபோர்னியாவில் உள்ள காடுகளில் பற்றி எரியும் தீயைக் கட்டுப்படுத்த இயலாமல் தீயணைப்புத் துறையினர் திணறி வருகின்றனர்.

லாஸ் ஏஞ்சலீஸின் வடகிழக்குப் பகுதியில் பற்றி எரியும் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தொடக்கத்தில் 5 ஏக்கர் அளவிலான காட்டுப் பகுதியில் பற்றி எரிந்த தீயானது, சில மணி நேரத்தில் சுமார் 400 ஏக்கர் அளவிற்கு பரவியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காட்டுத் தீ பற்றி எரியும் பகுதியை ஒட்டியுள்ள சாலை தற்போது மூடப்பட்டுள்ளதாகவும், தீயை அணைக்கும் முயற்சியில் இரு வீரர்களுக்கு காயம் ஏற்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எப்படி தீ பற்றியது என்பது தெரியாத நிலையில் வேகமாகப் பரவி வரும் காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் முயற்சி மேலும் தீவிரமடைந்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com