romanian womens body found partially eaten by her pet dogs
அட்ரியானா நீகோஎக்ஸ் தளம்

ருமேனியா | மர்மமான முறையில் உரிமையாளர் உயிரிழப்பு.. உடலை சாப்பிட்ட நாய்கள்!

ருமேனியா நாட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த உரிமையாளரின் உடலை அவரது வளர்ப்பு நாய்கள் சாப்பிட்டுள்ளன.
Published on

ருமேனியா நாட்டின் புக்கரெஸ்ட் பகுதியில் வசித்தவர் அட்ரியானா நீகோ. 34 வயதான பெண்மணியான இவர், தனது வீட்டில் இரண்டு பக் வகை நாய்களை வளர்த்து வந்துள்ளார். தனியாக வசித்து வந்த அவரை, கடந்த சில நாள்களாக அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் எந்தப் பலனும் இல்லாததால், குடும்பத்தினர் அவர் வசித்த வீட்டுக்கு விரைந்துள்ளனர்.

romanian womens body found partially eaten by her pet dogs
அட்ரியானா நீகோஎக்ஸ் தளம்

அப்போது, அவரது வீடு உள்புறமாக பூட்டப்பட்ட நிலையில் இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, ருமேனிய காவல் துறை மற்றும் தீயணைப்பு வீரர்களின் உதவியோடு அவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது, அட்ரியானா மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.

romanian womens body found partially eaten by her pet dogs
”அவரை திருத்துவதற்கு வாய்ப்பில்லை..”|தாயைக் கொன்று உடலை வறுத்து சாப்பிட்ட கொடூர மகனுக்கு மரண தண்டனை!

மேலும், அட்ரியானாவின் பாதி உடலை அவரது 2 வளர்ப்பு நாய்கள் சாப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த நாய்களுக்கு உணவு அளிக்கப்படாததால், அட்ரியானாவின் சடலத்தை அந்த நாய்கள் சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர், தடயவியல் நிபுணர்கள் நடத்திய சோதனையில் அங்கு வன்முறை எதுவும் நடக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

romanian womens body found partially eaten by her pet dogs
அட்ரியானா நீகோ

இருப்பினும், அவரது மரணத்திற்கான காரணம் உடற்கூராய்வின் அறிக்கை வெளியான பின்னரே தெரியவரும் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, நீகோவின் இறுதிச் சடங்கு உள்ளூர் தேவாலயத்தில் நடைபெறும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவரது இறப்பை உறுதி செய்துள்ள குடும்பத்தினர், நீகோவுக்காக இரங்கல் தெரிவித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர்.

முன்னதாக, இதேபோல் கடந்த 2023ஆம் ஆண்டு அர்ஜென்டினா நாட்டில் வயது மூப்பினால் உயிரிழந்த 67 வயது மூதாட்டியின் உடலை அவரது வளர்ப்பு நாய்கள் சாப்பிட்டது பல வாரங்கள் கழித்தே காவல் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com