உலகம்
ரோஹிங்யா இஸ்லாமியருக்கு எதிராக ஐநா?... செய்தி வெளியிட்ட பிபிசி!
ரோஹிங்யா இஸ்லாமியருக்கு எதிராக ஐநா?... செய்தி வெளியிட்ட பிபிசி!
ரோஹிங்யா இஸ்லாமியர்களுக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டிய ஐக்கிய நாடுகள் சபையே, அவர்களுக்கு எதிராக நடந்து கொண்டிருப்பதை பிபிசி நிறுவனம் அம்பலப்படுத்தியிருக்கிறது.
ரோஹிங்யா இஸ்லாமியர் வசிக்கும் பகுதிகளுக்கு மனித உரிமை ஆர்வலர்கள் செல்வதைத் தடுக்கும் முயற்சியில் மியான்மரில் உள்ள ஐக்கிய நாடுகள் அவையின் தலைவரே ஈடுபட்டிருப்பதாகவும், பிபிசி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. ரோஹிங்யா இஸ்லாமியர் வசிக்கும் பகுதிக்குச் செல்ல முயன்ற அதிகாரி ஒருவரை, ஐநா கிளையின் தலைவர் தடுத்ததாகவும் பிபிசி கூறியிருக்கிறது. ஐக்கிய நாடுகள் அவையின் பிபிசியின் இந்தச் செய்திக்கு மியான்மரில் உள்ள ஐக்கிய நாடுகள் அவைக் கிளை அலுவலகம் மறுப்புத் தெரிவித்துள்ளது.