ரோஹிங்கியா முஸ்லீம்கள் நிம்மதியாகத்தான் இருக்கின்றனர்: ஆங் சான் சூச்சி

ரோஹிங்கியா முஸ்லீம்கள் நிம்மதியாகத்தான் இருக்கின்றனர்: ஆங் சான் சூச்சி

ரோஹிங்கியா முஸ்லீம்கள் நிம்மதியாகத்தான் இருக்கின்றனர்: ஆங் சான் சூச்சி
Published on

ரோஹிங்கியா முஸ்லீம்களில் பெரும்பாலானோர் நிம்மதியாகத்தான் இருக்கிறார்கள் என அந்நாட்டுத் தலைவர் ஆங் சான் சூச்சி தெரிவித்துள்ளார்.

ரோஹிங்கியா முஸ்லீம்கள் கொல்லப்படுகின்றனர், அவர்கள் மீது மியான்மர் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது என்று சர்வதேச அளவில் குற்றச்சாட்டு கூறப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக வங்காளதேசம் ஐ.நா சபைக்கு விடுத்த கோரிக்கையில், மியான்மர் ராணுத்தின் தாக்குதலால் 3 லட்சம் ரோஹிங்கியா முஸ்லீம்கள் வங்காளதேசத்தில் தஞ்சம் அடைந்துள்ளதாகவும், அவர்களை பாதுகாக்க ஐ.நா உதவ வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது. இதற்கு மியான்மர் தலைவர் ஆங் சான் சூச்சி மறுப்பு தெரிவித்த போதிலும், மியான்மர் மீது சர்வேத அளவிலான குற்றச்சாட்டுகள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ரோஹிங்கியா முஸ்லீம்கள் மீதான தாக்குதல் விவகாரம் குறித்து விளக்கமளித்துள்ள ஆங் சான் சூச்சி, சர்வதேச அளவில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டாலும் மியான்மார் அஞ்சிவிடாது என்றும், ரோஹிங்கியா முஸ்லீம்கள் தாக்குப்படுவதாக வெளியாகும் தகவல்கள் பொய் என்றும் கூறியுள்ளார். ரோஹின்யா முஸ்லீம்களில் பெரும்பாலானோர் முன் இருந்தது போலவே நிம்மதியாக வாழ்கின்றனர் என்றும் கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் சர்வதேச நாடுகளுக்கு நம்பிக்கை இல்லையெனில், மனித உரிமைக் குழுக்கள் மூலம் மியான்மரில் ஆய்வு மேற்கொள்ளலாம் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். அத்துடன் மியான்மரின் ஒரு சில இடங்களில் ஏற்பட்டுள்ள வன்முறை நிலைக்கு ஆயுதம் ஏந்திய அமைப்பினரே காரணம் என்றும், நாட்டை விட்டு வெளியேறிய ரோஹிங்கியா முஸ்லீம்கள் அனைவரும் மியான்மருக்கு வந்தால் அனுமதித்து ஏற்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com