உலகம்
தப்பிவரும் ரோஹிங்யா இஸ்லாமியர்: வங்கதேசத்தில் இடமில்லாமல் தவிப்பு
தப்பிவரும் ரோஹிங்யா இஸ்லாமியர்: வங்கதேசத்தில் இடமில்லாமல் தவிப்பு
வன்முறைகள் காரணமாக மியான்மரில் இருந்து வங்கதேசத்துக்குத் தப்பிச் செல்லும் ரோஹிங்யா இஸ்லாமியரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஏற்கெனவே வங்கதேசத்தில் உள்ள தற்காலிக முகாம்களில் இடமில்லாமல் அகதிகள் தவித்து வரும் நிலையில், கூடுதலாக வரும் அகதிகளை தங்கவைப்பது நிவாரண அமைப்புகளுக்குச் சவாலான பணியாக இருக்கிறது. கடந்த சில வாரங்களில் மட்டும் நான்கு லட்சத்துக்கும் அதிகமான ரோஹிங்யா இஸ்லாமியர் வங்கதேசத்தின் காக்ஸ் பஸார் பகுதிக்குள் வந்திருப்பதாக ஐ.நா. மதிப்பிட்டிருக்கிறது. தங்களது வீடுகளை ராணுவம் தீவைத்து எரித்துவிட்டதாகவும், வன்முறைகளில் குடும்பத்தினர் கொல்லப்பட்டு விட்டதாகவும் தப்பிவரும் அகதிகள் தெரிவிக்கிறார்கள்.