ரோஹிங்யா விவகாரம் பிரிவினைவாதத்திற்கு வித்திடும்: ஐ.நா. பிரதிநிதி

ரோஹிங்யா விவகாரம் பிரிவினைவாதத்திற்கு வித்திடும்: ஐ.நா. பிரதிநிதி
ரோஹிங்யா விவகாரம் பிரிவினைவாதத்திற்கு வித்திடும்: ஐ.நா. பிரதிநிதி
Published on

மியான்மரில் நீடிக்கும் ரோஹிங்யா இனபிரச்னை, பிரிவினைவாதத்துக்கு வித்திடும் என ‌ஐக்கிய ‌நாடுகள் சபையின் மனித உரிமைக்கான சிறப்பு‌‌ பிரதிநிதி எச்சரித்துள்ளார்.

ராணுவ அடக்குமுறை, வன்முறை காரணமா‌க உயிருக்குப் பயந்து சுமார் 6 ‌லட்‌சம் ரோஹிங்யா இன இஸ்லாமியர்கள், மியான்மரில் இருந்து புலம்பெயர்ந்து வங்கதேசத்தில் அடைக்கலம் புகுந்துள்ளன‌‌ர். அவர்களுக்கு தேவையான உதவிகளை ஐக்கிய நாடுகள் சபை‌யும், தன்னார்வ அமைப்புகளும் வழங்கி வருகின்றன.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் பேசிய மனித உரிமைக்கான சிறப்பு பிரதிநிதி யா‌ங்கி லீ, வாழ்வாதாரத்தை தொலைத்துவிட்டு கேள்விக்குறியுடன் எதி‌ர்காலத்தை எதிர்கொண்டுள்ள ரோஹிங்யா இன‌மக்களுக்கு உதவும் வகையில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை உரிய தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார். ரோஹிங்யா என்ற ஒரு இனம் இருப்பதை மியான்மர் தலைவர் ஆங் சான் சூச்சி ஒப்புக் கொள்ள மறுக்கிறார். அதுதான் பிரச்னைக்கு மூலக் காரணம் என்றும் யாங்கி லீ தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com