ட்ரில்லர் மூலம் தனக்கு தானே மூளை அறுவை சிகிச்சை செய்த ரஷ்ய நபர்! வீணான 1லி ரத்தம்; அதிர்ச்சி பின்னணி

ரஷ்யாவைச் சேர்ந்த மைக்கேல் ரடுகா என்பவர் தனக்கு தானே மூளை அறுவை சிகிச்சை செய்துகொண்டதால் 1 லிட்டர் வீதம் ரத்தத்தை இழந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இதுகுறித்த படங்களை ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ளார்.
Russia- brain surgery- chip- dream control
Russia- brain surgery- chip- dream controltwitter

மனிதர்களின் வாழ்க்கையில் இன்று சமூக வலைதளங்கள் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. நம்முடைய அன்றாட வாழ்வில் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் உடனடி தீர்வை நாட சமூக வலைதளங்களையே நாடும் நிலையில் பலரும் உள்ளனர். பல நேரங்களில் உண்மைத்தன்மையற்ற தகவல்களை பெற்று இன்னல்களுக்கு ஆளாக நேரிடுகிறது

ரஷ்யாவை சேர்ந்த ஒருவர் யூட்யூப் மூலம் நரம்பியல் சார்ந்த விடியோக்களை பார்த்து தனக்குத்தானே மூளை அறுவை சிகிச்சை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Russia- brain surgery- chip- dream control
Russia- brain surgery- chip- dream controltwitter

ரஷியா டுடேவில் வெளியான அறிக்கையின்படி , நோவோசி பிரிஸ்க்சை சேர்ந்தவர் மைக்கேல் ரடுக. இவருக்கு வயது 40. இவருக்கு ஒரு வருடத்துக்கு முன்பு கனவுகளை கட்டுப்படுத்துவதற்காக மூளையில் எலெக்ட்ரோ சிப் பொருத்துவதற்கான யோசனை பிறந்துள்ளது. இதற்காக யூட்யூபில் நரம்பியல் வல்லுநனர்கள் வெளியிடும் வீடியோக்கள்  பலவற்றை கண்டுள்ளார். எனவே  மருத்துவமனைக்கு சென்று இதனை செயல்படுத்தலாம் என்று யோசித்தபோது சட்ட ரீதியான  சிக்கல்கள் ஏற்படும் என்று நினைத்ததால் தனக்கு தானே அறுவை சிகிச்சை செய்ய முடிவுசெய்துள்ளார்.

நியூஸ் வீக் அறிக்கையின் படி மே 17, 2023 அன்று தனக்கு தானே ட்ரில் கருவி மூலம் மூளையில் அறுவைசிகிச்சை செய்து எலெக்ட்ரோ சிப்பை பொருத்தும் விபரீத முடிவில் இறங்கினார்.

சுமார் 4 ,மணி நேரம்  நடந்த அறுவை சிகிச்சை காரணமாக  1 லிட்டர் வீதம் ரத்த  இழப்பு  ஏற்பட்டுள்ளது, கிட்டத்தட்ட இறக்கும் நிலையை அடைந்ததார். அவர் தான் தலையில் கட்டோடு இருக்கும் படங்கள், எலெக்ட்ரோடு பொருத்தப்பட்ட X RAY  படங்கள்  போன்றவற்றை தனது ட்விட்டர்  பக்கத்தில் ஜூலை 18 அன்று பகிர்ந்துள்ளார்.  கிட்டத்தட்ட இறக்கும் நிலையை  அடைந்த போதிலும் “கனவுகளை கட்டுப்படுத்தும் அற்புதமான ஒரு வாய்ப்பினை கண்டுபிடித்து விட்டேன்” என்று கூறினார் . 

குறிப்பு: தனது உயிரை பொருட்படுத்தாமல் இவர் செய்த என்பது நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. ஒரு செயலை செய்வதற்கு முன்பு அதைப்பற்றிய அடிப்படை அறிவு கொண்டுள்ளோமா, அதற்கான வழி முறைகளை அறிந்துள்ளோமா என்று 100 தடவை யோசித்தப்பின்னரே அச்செயலில் களமிறங்க வேண்டும். சிந்தனையில் தோன்றும் அனைத்தும் சரியான விளைவை கொடுக்கும் என்பது நிரந்தரம் இல்லை. குறிப்பாக உடல் ரீதியான முடிவுகளை கையாளும்போது அதற்கான வல்லுனர்களிடம் சென்று அச்செயலை செய்வது என்பது சிறந்தது. தாமாக முன் வந்து இத்தகைய செயல்களில் ஈடுபடக்கூடாது என்பது இதிலிருந்து புரிந்துகொள்ள வேண்டியது நிதர்சனம்.

- ஜெனிட்டா ரோஸ்லின்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com