ரஷ்யாவில் செயல்படும் இன்ஃபோசிஸ் - பிரிட்டன் நிதி அமைச்சரிடம் கேள்வி

ரஷ்யாவில் செயல்படும் இன்ஃபோசிஸ் - பிரிட்டன் நிதி அமைச்சரிடம் கேள்வி

ரஷ்யாவில் செயல்படும் இன்ஃபோசிஸ் - பிரிட்டன் நிதி அமைச்சரிடம் கேள்வி

ரஷ்யா மீது பிரிட்டன் நாடு பொருளாதாரத் தடைகள் விதித்து வரும் நிலையில், பிரிட்டன் நிதி அமைச்சர் ரிஷி சுனக்கின் மனைவி அக்ஷதா மூர்த்தி பங்குதாரராக உள்ள இன்ஃபோசிஸ் நிறுவனம் ரஷ்யாவில் செயல்படுவது குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.

நேட்டோ அமைப்பில் சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது அண்டை நாடான ரஷ்யா, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அந்நாட்டு மீது சிறப்பு ராணுவ நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால், பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் பலவும், ரஷ்யா மீது பொருளாதார தடைகள் உள்பட பல்வேறு தடைகளை விதித்து வருகிறது.

இந்நிலையில், பிரிட்டன் நிதி அமைச்சர் ரிஷி சுனக்கின் மனைவி அக்ஷதா மூர்த்தி பங்குதாரராக உள்ள இன்ஃபோசிஸ் நிறுவனம் ரஷ்யாவில் செயல்படுவது குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. இதுகுறித்து ஸ்கைநியூஸ் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ரிஷி சுனக், பிரிட்டனில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாக அரசியல்ரீதியாக பதில் சொல்ல, தான் மட்டுமே கடமைப்பட்டுள்ளதாகவும் தனது மனைவிக்கு அது பொருந்தாது என்றும் தெரிவித்து உள்ளார்.

மேலும், ரஷ்யாவில் முதலீடு செய்துள்ள பிரிட்டன் நிறுவனங்கள் புடினுக்கு உதவக்கூடும் என்பதால், ரஷ்ய முதலீடு குறித்து கவனமாக இருக்கவேண்டும் என்று தான் வலியுறுத்துவதாகவும், புதிதாக யாரும் ரஷ்யாவில் முதலீடு செய்யவேண்டாம் என்றும், நாம் ஒன்றிணைந்து ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடையை ஏற்படுத்தவேண்டும் என்றும், போரில் ரத்தம் சிந்தப்படுவதை நிறுத்தவேண்டும் என்றும் ரிஷி சுனக் கூறியுள்ளார்.

இதற்கிடையே, உக்ரைன் - ரஷ்யா இடையே அமைதி ஏற்படவே தங்கள் நிறுவனம் விரும்புவதாக இன்ஃபோசிஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பிரிட்டன் நிதி அமைச்சரான ரிஷி சுனக், இந்திய நிறுவனமான இன்ஃபோசிசின் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மகளான அக்ஷதா மூர்த்தியின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com