டெங்கு காய்ச்சல் எதிரொலி: பாகிஸ்தானில் பாராசிட்டமால் மாத்திரைக்கு தட்டுப்பாடு

டெங்கு காய்ச்சல் எதிரொலி: பாகிஸ்தானில் பாராசிட்டமால் மாத்திரைக்கு தட்டுப்பாடு
டெங்கு காய்ச்சல் எதிரொலி: பாகிஸ்தானில் பாராசிட்டமால் மாத்திரைக்கு தட்டுப்பாடு

பாகிஸ்தான் நாட்டில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில் பாராசிட்டமால் மாத்திரை அந்த நாட்டில் உள்ள பெரும்பாலான மருந்தகங்களில் கிடைப்பதில்லை என அங்கிருந்து வெளியாகும் DAWN பத்திரிகை தெரிவித்துள்ளது. மேலும் நாட்டில் கள்ளச்சந்தையில் இந்த மாத்திரை கிடைப்பதாகவும் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில், அங்கு டெங்கு காய்ச்சலும் சிலருக்கு ஏற்பட்டுள்ளதாம். அதனால் காய்ச்சல் மற்றும் வலி நிவாரணியான இந்த மாத்திரைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் நாட்டின் மருந்து ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

பாராசிட்டமால் மாத்திரை உற்பத்தி செய்ய அனுமதி இருந்தும் அதை உற்பத்தி செய்யாமல் உள்ள 15-க்கும் மேற்பட்ட மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு அது தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகவும் அந்த ஆணையம் தெரிவித்துள்ளது. 

பாகிஸ்தான் நாட்டில் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் தற்போது கொரோனா தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டில் தொற்று உறுதியாகும் சதவீதம் 9.65% ஆக உள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com