உலகம்
ஆஸ்திரேலியாவில் நாடாளுமன்ற கட்டடத்திற்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்
ஆஸ்திரேலியாவில் நாடாளுமன்ற கட்டடத்திற்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்
ஆஸ்திரேலியாவில் பழங்குடியினரின் உரிமைகளை பாதுகாக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பழைய நாடாளுமன்றக் கட்டடத்திற்கு தீ வைத்தனர்.
பழங்குடியினரின் உரிமைகளை பாதுகாக்கக் கோரி ஒருவார காலமாக கேன்பெராவில் போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென பழைய நாடாளுமன்ற கட்டடத்தின் நுழைவாயிலுக்கு தீ வைத்தனர். இதனால் பதற்றம் ஏற்பட்டதை அடுத்து காவல்துறையினர் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தி தீயை அணைத்தனர்.