இடைக்கால அதிபர் பதவிக்கு சஜித் பிரேமதாஸவை நியமிக்க தீர்மானம்

இடைக்கால அதிபர் பதவிக்கு சஜித் பிரேமதாஸவை நியமிக்க தீர்மானம்
இடைக்கால அதிபர் பதவிக்கு சஜித் பிரேமதாஸவை நியமிக்க தீர்மானம்

இடைக்கால அதிபர் பதவிக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை நியமிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.க்கள் குழு ஒருமனதாக தீர்மானம் செய்துள்ளது.

கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் கொண்டுவரப்பட்ட இந்த தீர்மானத்தை கட்சியின் தவிசாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா உறுதிப்படுத்தினார். ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டம் இன்று கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்று வருகிறது. இந்நிலையில், எதிரணியான ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்றத்தில் கிட்டத்தட்ட 50 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. மேலும் ஒரு பாராளுமன்ற வாக்கெடுப்பில் வெற்றிபெற அவர்களுக்கு 113 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளையில் இன்று கொழும்பில் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகச்சந்திப்பில் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார், அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைத்து நாட்டில் குறுகிய காலத்திற்கு ஆட்சி அமைக்கத் தாம் தயார் என்று தெரிவித்தார். மேலும் குறித்த காலகட்டத்தில் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வை காண அனைத்து கட்சிகளும் தயாராக உள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com