ட்ரம்பை விமர்சித்த சொந்த கட்சி எம்.பி ஃபிளேக்:: குவியும் பாராட்டுகள்
அமெரிக்க அதிபர் ட்ரம்பின் ஆட்சியில் ஜனநாயகத்துக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டிருப்பதாக அவரது சொந்த கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் பாப்கார்க்கரும், ஜெஃப் பிளேக்கும் பேசியதற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
அமெரிக்க அதிபர் ட்ரம்பை கடுமையாக விமர்சித்த ஃபிளேக்கை குடியரசு கட்சியைச் சேர்ந்த சில எம்.பி.க்கள் பாராட்டியுள்ளனர். உயர்ந்த கொள்கைகளுடன் தான் ஃபிளேக் தினசரி அலுவலகத்துக்கு வருவார் என்றும் சிறந்த மனிதர் என்றும் மிட்ச் மெக்கானல் புகழாரம் சூட்டியுள்ளார். அரிசோனாவை சேர்ந்த மற்றொரு எம்.பி.யான ஜான் மெக்கெயினும், ஃபிளேக் எடுத்த முடிவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் கூறும்போது, மேலும் பல எம்.பி.க்கள் நாட்டின் நலன் கருதி மனம் திறந்து பேச வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். அப்போதுதான் சில நேர்மறையான மாற்றங்கள் நிகழ்வதற்கு வாய்ப்பு ஏற்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.