மீண்டும் காதலில் விழுந்த பில் கேட்ஸ்.. யாருடன் தெரியுமா?
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் அவரது மனைவி மெலிண்டா கேட்ஸை விவாகரத்து செய்தார். தம்பதியாக தொடர்ந்தால் தங்கள் வாழ்க்கையில் அடுத்தக்கட்ட வளர்ச்சியை எட்டமுடியாது என கருதுவதாகக் கூறி தங்களது 27 வருட திருமண வாழ்க்கையை முறித்துக்கொண்டனர் இருவரும். இந்நிலையில் தற்போது மீண்டும் காதல் வயப்பட்டுள்ளார் பில் கேட்ஸ் என்கிறது நெருங்கிய நட்பு வட்டாரங்கள்.
பவுலா ஹர்டு, 2019ஆம் ஆண்டு மரணமடைந்த ஓராக்கள் நிறுவனத்தின் சி.இ.ஓ-ஆன மார்க் ஹர்டின் மனைவி. 60 வயதான இவர்மீது தான் தற்போது 67 வயதான பில்கேட்ஸிற்கு காதல் மலர்ந்திருக்கிறது.
கடந்த மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் இருவரும் ஜோடியாக கலந்துகொண்ட புகைப்படங்கள் இணையங்களில் வலம்வந்தது. ”பில் கேட்ஸும் பவுலா ஹர்டும் டேட்டிங் செய்கிறார்கள் என்பது பெரும்பாலானோருக்கு தெரிந்ததே. ஆனால் பவுலா இன்னும் கேட்ஸின் குழந்தைகளை சந்திக்கவில்லை” என்று தெரிவித்திருக்கிறது அவர்களது நெருங்கிய வட்டாரங்கள். மேலும், “அவர்கள் பிரிக்க முடியாதவர்களாகி விட்டனர்” என தெரிவித்துள்ளார் இவர்களின் நண்பர் ஒருவர்.
பவுலாவின் கணவர் ஹர்டு கடந்த 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார். பவுலா ஒரு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மற்றும் சமூக சேவகியும்கூட. முன்பு தொழில்நுட்ப நிர்வாகியாகவும் பணியாற்றியுள்ளார்.
பவுலாவும், கேட்ஸும் ஒரே வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் ஹர்டின் இறப்புக்கு முன்பே இருவருக்கும் இடையே உறவு இருந்ததாகவும், அதற்கு காரணம் இருவருக்கும் டென்னிஸ் மீது இருந்த ஆர்வம்தான் எனவும் செய்தி வெளியிட்டிருக்கிறது Pagesix. இந்நிலையில் தற்போது இருவரும் காதலில் இருப்பதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.