உலகின் மக்கள் தொகை
உலகின் மக்கள் தொகைமுகநூல்

அதிகரித்த உலகின் மக்கள் தொகை;அமெரிக்க கணக்கெடுப்புத்துறை கணித்தது இதுதான்!

2024ஆம் ஆண்டு இன்றுடன் முடிவுக்கு வரும் நிலையில் இந்தாண்டில் மட்டும் உலகின் மக்கள் தொகை 7 கோடியே 10 லட்சம் அதிகரித்துள்ளதாக அமெரிக்க கணக்கெடுப்புத்துறை கணித்துள்ளது.
Published on

முந்தைய 2023ஆம் ஆண்டை விட மக்கள் தொகை உயர்வு 0.9% குறைவாக உள்ளதாகவும் அமெரிக்க அரசுத் துறை தெரிவித்தள்ளது.

ஜனவரி மாதம் ஒவ்வொரு நொடிக்கும் சராசரியாக 4.2 குழந்தைகள் பிறக்கும் என்றும் 2 பேர் இறப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் மக்கள் தொகை
”விமானத்தில் பின்னால் அமர்ந்தால் ஆபத்து குறைவு” - ஆய்வில் தகவல்

ஜனவரி முதல் நாளில் உலக மக்கள் தொகை 809 கோடியாக இருக்கும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேற்றங்கள் அதிகரித்துள்ளன என்றும் இதனால் ஒவ்வொரு 23.2 நொடிக்கும் அமெரிக்க மக்கள் ஒரு எண்ணிக்கை அதிகரிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com