ஒசாமா பின்லேடன் குடும்பத்திடமிருந்து நிதியுதவி பெற்றாரா இளவரசர் சார்லஸ்? வைரலாகும் தகவல்

ஒசாமா பின்லேடன் குடும்பத்திடமிருந்து நிதியுதவி பெற்றாரா இளவரசர் சார்லஸ்? வைரலாகும் தகவல்
ஒசாமா பின்லேடன் குடும்பத்திடமிருந்து நிதியுதவி பெற்றாரா இளவரசர் சார்லஸ்? வைரலாகும் தகவல்

பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் குடும்பத்திடம் இருந்து இளவரசர் சார்லஸ் நிதியுதவி பெற்றதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.

சர்வதேச பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், ஒசாமாவின் உறவினரும் சகோதரரான ஷபீக் பின்லேடனிடம் இருந்து 2013ஆம் ஆண்டு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த தொகை, பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் அறக்கட்டளைக்கு சென்றதால், தனிப்பட்ட காரணங்களுக்காக பயன்படுத்தப்படவில்லை எனக்கூறப்படுகிறது.

பின்லேடன் குடும்பத்தினரிடம் இருந்து பெருந்தொகை நன்கொடையாக பெறுவது அரச குடும்பத்திற்கு சிக்கலை ஏற்படுத்தும் என அப்போது அரண்மனை அதிகாரிகள் தரப்பு எச்சரித்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தற்போது பேசுபொருளாகியுள்ள நிலையில், இதுவரை இளவரசர் சார்லஸ் தரப்பில் இருந்து எந்த ஒரு அறிக்கையும் வெளியிடப்படவில்லை.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com