Report by Anthropic Reveals Jobs Most Affected by AI
Anthropicx page

எந்தெந்த வேலைகளை AI காலி செய்யும்? ஆந்த்ரோபிக் அறிக்கையால் இளையோருக்கு பாதிப்பு!

செயற்கை நுண்ணறிவு எந்தெந்த வேலைகளைப் பாதிக்கும் என்பது குறித்து ஆந்த்ரோபிக் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை கவனம் பெற்றுள்ளது.
Published on

ஓபன் ஏஐ (சாட்ஜிபிடி), கூகுள் (ஜெமினி), எக்ஸ் (குரோக்) ஆகியவற்றுக்கு மத்தியில் ஆந்த்ரோபிக் (Claude ஏஐ) குறிப்பிடத்தகுந்த போட்டியாளராக உருவெடுத்துள்ளது. இதன் வரவு, பங்குச் சந்தைகளிலும் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், செயற்கை நுண்ணறிவு எந்தெந்த வேலைகளைப் பாதிக்கும் என்பது குறித்து ஆந்த்ரோபிக் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை கவனம் பெற்றுள்ளது.

இன்று, உலகமே செயற்கை நுண்ணறிவு துறையால் வேகம் பிடித்துள்ளது. அனைத்துத் துறைகளும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டன. இதனால், அதே தொழில்நுட்பத்தில் போட்டிகளும் வர ஆரம்பித்துவிட்டன. அந்த வகையில், ஓபன் ஏஐ (சாட்ஜிபிடி), கூகுள் (ஜெமினி), எக்ஸ் (குரோக்) ஆகியவற்றுக்கு மத்தியில் ஆந்த்ரோபிக் (Claude ஏஐ) குறிப்பிடத்தகுந்த போட்டியாளராக உருவெடுத்துள்ளது. இதன் வரவு, பங்குச் சந்தைகளிலும் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில்கூட, இந்த நிறுவனம் சீனா மீது குற்றஞ்சாட்டியிருந்தது. டீப்சீக், மூன்ஷாட் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது ஏ.ஐ தொழில்நுட்பத்தைத் திருடிவிட்டதாக தெரிவித்திருந்தது. மேலும், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தலைமையிலான அரசுக்கும் ஆந்த்ரோபிக் நிறுவனத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

Report by Anthropic Reveals Jobs Most Affected by AI
Anthropicx page

இந்த நிலையில், செயற்கை நுண்ணறிவு எந்தெந்த வேலைகளைப் பாதிக்கும் என்பது குறித்து ஆந்த்ரோபிக் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை கவனம் பெற்றுள்ளது.

Report by Anthropic Reveals Jobs Most Affected by AI
ட்ரம்பை எதிர்த்த அமெரிக்க நிறுவனம்.. எதிர்காலம் என்ன ஆகும்? ஒப்பந்தம் போட்ட ஓபன் ஏஐ!

இதன்படி, கணினி நிரலாக்கம், நிதி பகுப்பாய்வு, சட்டம் மற்றும் வாடிக்கையாளர் சேவை போன்ற பணிகள் ஏஐயால் அதிக பாதிப்புக்குள்ளாகும் அபாயத்தில் உள்ளன. ஐடி, வணிகம் மற்றும் நிர்வாகப் பணிகளில் AI பயன்பாடு அதிகரிப்பதால், குறிப்பாக இளைய தலைமுறையினருக்கான புதிய வேலைவாய்ப்புகள் 14 சதவீதம் குறைந்துள்ளன. கல்வித் தகுதியைப் பொறுத்தவரை, குறைந்த கல்வி தகுதி கொண்டவர்களைவிட அதிக கல்வித்தகுதி கொண்டவர்கள் நான்கு மடங்கு அதிக அபாயத்தில் உள்ளனர். ஆண்களுடன் ஒப்பிடுகையில், பணியிடங்களில் ஏஐயால் பாதிக்கப்படும் பிரிவில் 54.4 சதவீதம் பெண்கள் உள்ளனர்; வயது அடிப்படையில் சராசரியாக 43 வயதுக்கு மேற்பட்ட பணியாளர்கள் அதிக ஆபத்தில் உள்ளனர்.

Report by Anthropic Reveals Jobs Most Affected by AI
Anthropicx page

இந்திய ஐடி துறையில் ஏஐ பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. டிசிஎஸ், விப்ரோ, இன்ஃபோசிஸ் போன்ற முன்னணி நிறுவனங்களின்பங்குகளைப் பாதித்துள்ளது. எதிர்காலத்தில் ஐடி நிறுவனங்களின் வருவாய் 12% வரை குறையலாம் என எச்சரிக்கப்படுகிறது. மனித உழைப்பைச் சார்ந்திருந்த பணிகள் தானியங்கி முறையானதால், இந்திய ஐடி துறை தனது வணிக மாதிரியை உடனடியாக மாற்றியமைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அதேசமயம், கட்டுமானம், விவசாயம், பாதுகாப்பு மற்றும் தனிநபர் பராமரிப்பு போன்ற துறைகள், ஏஐ பயன்பாடு குறைவாக இருப்பதால் தற்போதைக்கு ஓரளவுக்குப் பாதுகாப்பாக உள்ளதாக ஆந்த்ரோபிக் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com