கலிபோர்னியாவில் தொடரும் காட்டுத் தீ: நகரங்களில் இருந்து மக்கள் வெளியேற்றம்

கலிபோர்னியாவில் தொடரும் காட்டுத் தீ: நகரங்களில் இருந்து மக்கள் வெளியேற்றம்
கலிபோர்னியாவில் தொடரும்  காட்டுத் தீ: நகரங்களில் இருந்து மக்கள் வெளியேற்றம்


அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத் தீ வேகமாக பரவிவருகிறது. அதனைக் கட்டுப்படுத்தும் பணியில் ஆயிரத்துக்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் கடுமையாகப் போராடி வருகின்றனர். அமெரிக்காவின் மேற்கில் பெரும்பாலான பகுதிகளில் வெப்ப அலை பரவிவருகிறது.

காட்டுத்தீயை அணைக்கும் பணியில் கலிபோர்னியா வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறையைச் சேர்ந்த 14, 800 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். அதிக மக்கள் வாழும் இந்த மாகாணம் முழுவதும் 23 இடங்களில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது.

கடந்த வெள்ளியன்று மத்திய கலிபோர்னியாவின் பிரெஸ்னா பகுதியில் காட்டுத் தீ தொடங்கியது. முதல் மூன்று நாட்களில் 850 தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டாலும் தீவிரம் குறையவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

காட்டுத்தீயின் காரணமாக 32 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பருவ நிலையில் கடுமையான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பிக் கிரீக் பகுதியில் உள்ள கிராமத்தில் முப்பது வீடுகள் தீக்கிரையாகிய நிலையில், ஓர் ஆரம்பப் பள்ளி, தேவாலயம், ஸ்டோர் உள்ளிட்ட இடங்களுடன் மக்களும் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

சனிக்கிழமையன்று காட்டுத் தீ பரவிய பிரெஸ்னோ வடகிழக்குப் பகுதியில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் 207 பேர் மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com