குழந்தையின் முகத்தில் சிவப்பு கட்டி! உறவினர்கள் புறக்கணிப்பதால் வேதனையடைந்த பெற்றோர்

குழந்தையின் முகத்தில் சிவப்பு கட்டி! உறவினர்கள் புறக்கணிப்பதால் வேதனையடைந்த பெற்றோர்
குழந்தையின் முகத்தில் சிவப்பு கட்டி! உறவினர்கள் புறக்கணிப்பதால் வேதனையடைந்த பெற்றோர்

பிறக்கும்போதே முகத்தில் ஸ்ட்ராபெரி பழக்கலரில் அதே சைஸில் குழந்தையின் மூக்கில் கட்டியோடு பிறந்த குழந்தையை உறவினர்களும் அக்கம் பக்கத்தினரும் புறக்கணிப்பதாக வேதனையை வெளிப்படுத்தியிருக்கும் செய்தி சமூக வலைதளத்தில் பரவி… பெற்றோருக்கு ஆறுதலையும் குழந்தைக்கு ஆதரவையும் பெருகிக் கொடுத்திருக்கிறது.

 இங்கிலாந்து நாட்டில் வடக்கு வேல்ஸிலுள்ள ரிச்சர்ட்-மேரி தம்பதிக்கு பிறந்த குழந்தைதான் தஹ்லியா. பிறக்கும்போதே முகத்தில் அப்படியொரு கட்டியோடு பிறந்ததால் உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கதினர் சிலர் அக்குழந்தையை கொஞ்சாமல் புறக்கணித்திருக்கிறார்கள்.

இதைப்பார்த்த, பெற்றோர் கடுமையான மன வேதனைக்கு ஆளாகியிருக்கிறார்கள். பெற்றோர் இதுகுறித்து, டாக்டரை அணுகியபோது, ’ஹீமாஞ்சியோமா’ என்று அழைக்கப்படும் ஸ்ட்ராபெரி கட்டி இது. 10 வயதுவரை குழந்தையின் வளர்ச்சியைத் தடுக்கும். முறையான சிகிச்சை அளித்தால் காலப்போக்கில் மறைந்துவிடும்’ என்று ஆறுதல்படுத்தி அனுப்பியிருக்கிறார்கள்.

  “எங்க குழந்தையைப் பார்த்து மூக்கில் என்ன என்று கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். முகத்தில் ஜாம் இருக்கிறதா என்று கேலி செய்கிறார்கள். அவளது பெயரைச்சொல்லி அழைப்பதைத்தான் விரும்புகிறோம். பட்டப்பெயரை அல்ல.  இப்போதே…. இப்படி புறக்கணித்தால் எங்க குழந்தை ஸ்கூலுக்கு போனா என்ன மாதிரியான புறக்கணிப்புகளை எதிர்கொள்ளுமோ?” என்று அச்சத்தையும் வேதனையையும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

தற்போது, குழந்தை தஹ்லியாவிற்கு மூக்கில் ஏற்பட்ட வடுவை நீக்கம் செய்வதற்கான சிகிச்சையை செய்துகொண்டிருக்கிறார்கள் பெற்றோர். குழந்தைக்கு நோய் ஆபத்தைவிட சமூகத்தில் ஏற்பட்டிருக்கும் புறக்கணித்தல் மற்றும் இழிவுப்படுத்துதல் என்னும் நோயைக் கண்டுதான் பெற்றோர் பயந்து நடுங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com